”பாஜகவில் சேர்கிறேன் அதுவே மோசமான தண்டனையாக இருக்கும்” – உதயநிதி!

யானைகளும் பராசக்தியும்!

பாஜக பிரமுகர் ஒருவருக்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின் நான் திமுக அறக்கட்டளை உறுப்பினர் என்பதை நிரூபித்தால் பாஜகவில் இணைந்து விடுகிறேன். அதுவே மோசமான தண்டனையாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக இளைஞர் அணியினரைச் சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா என்பவர் வாரிசு அரசியல் குறித்து டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு. திமுகவை ஆதரிக்கும் ராகுல், பிரியங்கா, ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வாரிசுகளே. இந்த வரிசையில் தமிழிசை சேரவில்லை. அவர் தன் தந்தையின் வழியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.கோடிக்கணக்கான சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் திமுக அறக்கட்டளைக்கு உதயநிதியை அறங்காவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவியை பகிர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின்  “நான் திமுக அறக்கட்டளையில் இருப்பதை நிரூபித்தால் உங்கள் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்து விடுவேன். அதுதான் மிக மோசமான தண்டனையாக இருக்கும். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்”என டுவிட் செய்துள்ளார்.

#திமுக_அறக்கட்டளை #DMK_TRUST #Udhaystalin

#2019நாடாளுமன்றதேர்தல் பேச்சுவார்த்தைக்கு திமுக குழு அமைப்பு!

“ சபரிமலை விவகாரத்தில் நாங்கள் தோற்று விட்டோம்” பாஜக அறிவிப்பு!

நாட்டில் நெருக்கடி நிலவுகிறது -சோனியாகாந்தி!

மதுரை வரும் மோடிக்கு கருப்புக் கொடி –வைகோ அறிவிப்பு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*