பாஜகவுக்கு இரு பிரதமர் வேட்பாளர்கள் வடக்கில் ராமர்- தெற்கில் அய்யப்பன் ஆனால்?

கடும் குளிரில் தமிழகம் டயாபடிக் நோயாளிகள்-பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட் -Dr.ஃபரூக் அப்துல்லா

மோடி தமிழகம் வருகை -கருப்பு நிற பொருட்களுக்கு தடை!

ஸ்டெர்லைட் தரப்பிடம் பணம் பெற்றாரா சீமான்?”

இடதுசாரிகளின் கோட்டைகளுள் ஒன்றான கேரள மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற சபரிமலை அய்யப்பன் கைகொடுப்பார் என்று பாஜக நம்புகிறது.  இந்தியாவில் பல மாநிலங்களில் வரலாறு காணாத வெற்றிகளை குவித்து வந்த பாஜகவின் வசந்த காலம் முடிவுக்கு வருகிறது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களே கைவிட்டுப் போய் அம்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அது போல உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டணி வலிமையாகி உள்ளதால் அங்கும் வெற்றி பெறுவதில் சிரமங்கள் ஏற்படும் என்பதால், தென் மாநிலங்களை நம்பியே வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை பாஜக எதிர்கொள்ள இருக்கிறது. குறிப்பாக தமிழகம் , கேரளம் இந்த இரு மாநிலங்களிலும் கணிசமான நாடாளுமன்ற தொகுதிகளையும் வெல்வதன் மூலம் மத்தியில் ஆட்சியை தக்கவைக்கலாம் என பாஜக நினைக்கிறது.

தமிழகம் ,கேரளம் இரு மாநிலங்களிலுமே பாஜகவுக்கு செல்வாக்கில்லை. தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அதிமுகவை மிரட்டி அதன் ஆதரவில் வென்று அல்லது, கூட்டணி வைத்து வென்று கணிசமான தொகுதிகளை வெல்லலாம் என நினைக்கிறது பாஜக, அது போல கேரளத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை வழிபாடு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பாஜக போராடி வருகிறது. சமீபத்தில் பாஜக உள்ளிட்ட வலதுசாரிகளின் எதிர்ப்புக்கு கண்டனமும், எச்சரிக்கையும் தெரிவித்து 50 லட்சம் பெண்கள் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். அதற்கு பதிலடியாக இன்று பந்த் நடத்துகிறது பாஜக பல இடங்களில் தாக்குதல்களும், வன்முறைகளும் பதிவாகி உள்ள நிலையில், கேரள சபரிமலை விவகாரத்தை திவீரமாக்க இருக்கிறது பாஜக.

அயோத்தியில் ராமர்கோவிலும், கேரளத்தில் அய்யப்பனும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர்களாக வரவிருக்கும் தேர்தலில் முன்னிறுத்தப்படுகிறார்கள். ஆனால், ராமருக்கு எதிரிகளாக இஸ்லாமிய மக்களை சித்தரித்தது போல, அய்யப்பனுக்கு எதிரியாக இந்து பெண்களை சித்தரித்து வருகிறது பாஜக. இது எடுபடுமா என்பது ஒரு பக்கம் இருக்கும் நிலையில், இன்றைய பந்தின் போது பைக்கில் கும்பலான வரும் பாஜகவினரை மக்கள் எதிர்கொண்ட காட்சி இது..!

kerala_bjp_iyappan

kerala_bjp_iyappan

Posted by Tamilarasial on Thursday, January 3, 2019

#சபரிமலை #sabarimala #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence

பயனில்லாமல் போன பசுமாடுகள் –மக்களுக்கு வரி!

அதிமுக திமுக உறுப்பினர்கள் மக்களவை மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட்!

முத்தலாக் மசோதா அதிமுக எம்.பிக்களுக்கு பாஜக உத்தரவு!

பெண் தரிசனம் உண்மைதான் –அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்-கேரள முதல்வர் அறிவிப்பு!

ஜெயலலிதா உயிரைக் காக்க அதிமுக தவறிவிட்டது- ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*