பாஜகவுடன் மோதும்  தம்பிதுரை யாருடைய மனச்சாட்சி?

பத்திரிகையாளர் கொலை –சாமியாருக்கு ஆயுள் தண்டனை!

பாஜகவை அதிமுக தன் முதுகில் சுமக்க முடியாது என்று அதிமுக எம்.பியும் அதிமுக நாடாளுமன்ற குழு தலைவருமான தம்பிதுரை கூறியிருப்பது அரசியல் அரங்கில் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் நிலையில், அதிமுகவுக்குள் அது பிளவை ஏற்படுத்தும் சூழலையும் உருவாக்கியிருக்கிறது.

ஜெயலலிதா  மரணத்தின் பின்னர் அதிமுக பாஜக கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதாவது, ஆட்சி செய்வதற்கான வலுவை இழந்த அதிமுகவை பாஜக நியமித்த ஆளுநர்கள் காப்பாற்றினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. அது போல அதிமுக ஆட்சியை அகற்றும் விதமான தீர்ப்புகள் எதுவும் நீதிமன்றத்தில் வழங்கப்படவில்லை. மேலும், அதிமுகவோடு யார் இணைவது யாரை சேர்ப்பது என்கிற பேச்சுவார்த்தையும்  பாஜக பத்திரிகை பிரமுகரே செய்து வருகிறார். இந்த சூழல்தான் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் பாஜக அதிமுக கூட்டணி உருவாகும் சூழல் புறச்சூழலாக உருவாகி உள்ளது.

இந்நிலையில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி “அதிமுகவோடு பாஜக கூட்டணி அமைக்க வேண்டும்” என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார். இதையொட்டி கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக தம்பிதுரை:-

பாஜக தமிழகத்தில் காலூன்ற அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியிருப்பது கேலிக்கூத்தான விஷயம். அவர் விளம்பரத்திற்காக பேசுகிறார். அதிமுகவை நாங்கள் மேலும் வளர்க்க பாடுபடுகிறோம். பாஜகவை  அவர்கள் வளர்க்கட்டும்.பாஜகவைச் சுமக்கும் பாவத்தை அதிமுகவினர் செய்ய மாட்டார்கள். பாஜகவை  சுமக்க மாட்டோம்.”என்றார்.

பாஜக- அதிமுக கூட்டணி குறித்து ஓபிஎஸ்-இபிஎஸ்  இருவரும் எதுவும் கூ
றாத நிலையில், அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான தம்பிதுரையின் கருத்தை அதிமுகவின் கருத்து அல்ல என்றும் அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் பாஜகவினர் கூறி வருகிறார்கள். தம்பிதுரையின் கருத்து பரவலாக பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. திமுக பாஜகவோடு கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறிய நிலையில், பாஜக அதிமுகவோடு கூட்டணி வைத்தாக வேண்டிய நிலை மட்டுமே உள்ளது. அதிமுக கூட்டணியைத் தவிற பாஜகவுக்கு வேறுவழியில்லை என்னும் நிலையில், தம்பிதுரை பொதுவாக கட்சிக்குள் உள்ள தொண்டர்களின் மன நிலையை பிரதிபலித்ததாக தெரிகிறது. மேலும் சசிகலாவின் விசுவாசியான தம்பிதுரை பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என்ற எண்ணத்துடன் உள்ளார். ஆனால், அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட சிலர் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களே மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை கூட்டணி பேச சென்னைக்கு வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. தம்பிதுரையின் கடும் எதிர்ப்பால் பியூஸ் கோயல் வருகை தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. என்றாலும் அதிமுகவில் விரைவில் பிளவுகள் இருக்கலாம். பாஜகவோடு கூட்டணி வைத்தாலும் பிளவு, கூட்டணி வைக்கா விட்டாலும் பிளவு என்கிற நிலையை நோக்கியே அதிமுக நகர்கிறது.

#bjp_admk #அதிமுக_பாஜக_கூட்டணி #அதிமுக_பாஜக_பாமக

கொல்கொத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின்!

அஞ்சுகிறது அரசு- பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

மோடிக்கு பிலிப் கோட்லேர் விருது உண்மை என்ன?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*