பெண்கள் வாவர் மசூதிக்குள் வர தடையில்லை -ஜமாத் அறிவிப்பு!

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள வாவர் மசூதிக்குள் பெண்கள் செல்ல அனுமதியில்லை என்று தகவல்கள் கசிந்த நிலையில், வாவர் மசூதிக்குள் பெண்கள் செல்ல தடையில்லை என்று வாவர் மசூதி ஜமாத் அறிவித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் வயதுவேறுபாடின்றி பெண்கள் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில், கேரள அரசு தீர்ப்பை அமல் படுத்த முயன்ற போது பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் பெரும் பிரச்சனைகளை கேரளாவில் நடத்தின. இந்நிலையில், சபரிமலை செல்லும் வழியில் இருக்கும் வாவர் மசூதிக்குள்ளும் பெண்கள் செல்ல அனுமதியில்லை என்று சில இந்துத்துவ அமைப்பினர் வாவர் மசூதிக்குள் நுழையும் போராட்டங்களை நடத்தினர்.
இதற்கிடையில் எரிமேலி வாவர் மசூதி நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
“வாவர் மசூதியில் வயது வேறுபாடின்றி ஆண்களும், பெண்களும் பல ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வருகிறார்கள். இங்கு வரும் பெண்கள் உட்பட எவரும் மசூதியை வலம் வந்து பிரார்த்தனை செய்து காணிக்கை செலுத்தி விட்டு சபரிமலை செல்கிறார்கள். பள்ளிவாசலுக்குள் தொழுகை நடக்கும் இடத்திற்கு பெண்கள் செல்வது கிடையாது. நல்ல எண்ணத்துடன் இங்கு யாரும் வர தடையில்லை” என்று அறிவித்துள்ளது.

#Sabarimala #VavarMasjid

மேலும் வாசிக்க,

பொருளாதார இட ஒதுக்கீடு ஊழலுக்கு வழி வகுக்கும் – தம்பிதுரை!

வீரப்புதல்வர்களின் வழி நடப்போம்!

திருநங்கையை மகளிரணி தேசிய தலைவராக்கிய ராகுல்காந்தி!

தமிழக நாடார்கள் ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு – நூல் விமர்சனம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*