பொருளாதார இட ஒதுக்கீடு ஊழலுக்கு வழி வகுக்கும் – தம்பிதுரை!

பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு கொண்டு வருவது ஊழலுக்கு வழிவகை செய்யும் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த தலைவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. வட இந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான அலை வீசும் நிலையில், உயர்சாதியினரை சமாதானப்படுத்தும் முயற்சியிலும், அவர்களின் வாக்கு வங்கியை குறிவைத்தும் பாஜக இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கும் நிலையில், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை:-
“பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்தால் ஊழலும், அநீதியும்தான் உருவாகும் என்பது அதிமுகவின் கருத்து. சமூகநீதிக்காகத்தான் இட ஒதுக்கீடே தவிற பொருளாதார உதவிக்காக அல்ல, பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு அளித்தால் சமூக நீதி மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது. சமூக நீதியை திசை திருப்பவே பொருளாதர அளவில் இட ஒதுக்கீடு என்கிறார்கள். இது பாதிப்பை ஏற்படுத்தும்.

#Reservation #Social_Justice #Caste_discrimination #Thanthai_Periyar #tamilnadu

மேலும் வாசிக்க,

திருநங்கையை மகளிரணி தேசிய தலைவராக்கிய ராகுல்காந்தி!

தமிழக நாடார்கள் ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு – நூல் விமர்சனம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*