முத்தலாக் மசோதா அதிமுக எம்.பிக்களுக்கு பாஜக  உத்தரவு!

பெண் தரிசனம் உண்மைதான் –அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்-கேரள முதல்வர் அறிவிப்பு!

ஜெயலலிதா உயிரைக் காக்க அதிமுக தவறிவிட்டது- ஸ்டாலின் குற்றச்சாட்டு!

மாநிலங்களவையில் இன்று அல்லது நாளை முத்தலாக் மசோதா தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டும். அல்லது வெளிநடப்பு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டு மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கக் கூடாது என்று பாஜக அதிமுகவுக்கு உத்தரவிட்டுள்ளது.

இன்று முத்தலாக் மசோதாவை பாஜக அர்சு தாக்கல் செய்வதாக இருந்தது. இந்த மசோதாவை அதிமுக ஆதரிக்குமா எதிர்க்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.மக்களவையில் இந்த  தீர்மானத்திற்கு எதிராக அன்வர்ராஜா  பேசியது அதிமுகவின் கருத்தாக அல்லாமல் தனிப்பட்ட கருத்தாக முடிந்து போன நிலையில், மாநிலங்களவையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த குறிப்பாக முஸ்லீம் உறுப்பினர்கள் எவரும் இல்லாத நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றியாக வேண்டிய நெருக்கடியில் பாஜக உள்ளது.

இந்நிலையில்  மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா விவகாரத்தில் என்ன  நிலைப்பாடு எடுக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.  “நாங்கள் முத்தலாக் மசோதாவை எதிர்த்து சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்போம்” என்று தம்பிதுரை கூறினார். என்றாலும் எதிர்ப்பது என்றால் வாக்களித்து எதிர்க்க வேண்டும். ஆதரிபப்து என்றால்  மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தும் ஆதரிக்கலாம். வெளிநடப்பு செய்தும் ஆதரிக்கலாம். கடந்த முறை இந்த மசோதா தாக்கல் ஆன போது எதிர்த்து பேசிய அதிமுக வெளிநடப்பு செய்து மசோதாவை ஆதரித்தது. என்றாலும், போதிய ஆதரவில்லாமல்  மசோதா தோல்வியில் முடிந்தது. பின்னர் திருத்தங்களுடன் இப்போது முன் வைக்கிறது.

அதிமுகவுக்கு மொத்தம் 13 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் உள்ளார்கள். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு 93 உறுப்பினர்களும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 112 உறுப்பினர்களும் உள்ளார்கள். எனவே அதிமுக உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தாலும் மசோதா வெற்றி பெறாது என்ற நிலையில், பாஜக அதிமுகவுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், ஒன்றிலோ ஆதரிது வாக்களியுங்கள், அல்லது வெளிநடப்புச் செய்யுங்கள். ஆனால், மசோதாவுக்கு எதிராக வாக்களித்தால் விளைவுகள் விபரீதமாக அமையும் என்று உத்தரவிட்டுள்ளதாம். இதனால் சென்னையில் இருந்து வாக்கெடுப்பின் போது என்ன அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்பது பற்றிய உத்தரவுக்காக டெல்லியில் காத்திருக்கிறார்கள் அதிமுக எம்.பிக்கள்.

#முத்தலாக் #Tribal_Talac ##Tribal_Talac_BJP #இஸ்லாமிய_தனிச்சட்டம் #இஸ்லாமியசமூகம்

video இரு இளம் பெண்கள் அய்யப்பனை தரிசித்தனர்- கோவில் மூடப்பட்டது!

வலதுசாரிகளுக்கு சவால் விட்டு வரலாறு படைத்த வனிதா மதில்!

எச்.ஐ.வி இளைஞர் மரணிக்க விடப்பட்டாரா?

ஜெ’ கொலையா தற்கொலையா? விசாரிக்க வேண்டியது யாரை?

#Gaja_Cyclone கேட்டது 15,000 கோடி கொடுத்தது 1,146 கோடி!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*