மோடிக்கு பிலிப் கோட்லேர் விருது உண்மை என்ன?

அஞ்சுகிறது அரசு- பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

அமெரிக்காவின் பொருளாதார எழுத்தாளர் பிலிப் கோட்லர் பெயரிலான விருது இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவில் பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளை எழுதுகிறவர் பிலிப் கோட்லர். உலக அளவில் உயரிய விருது என்ற அடைமொழியோடு இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கபப்ட்டது. மக்கள் மேம்பாடு, பொருளாதார முன்னேற்றம், தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றி இந்தியாவை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு சென்றதற்காக இந்த விருது மோடிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விருது தொடர்பாக ட்விட் ஒன்றை பதிவு செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி:-
“இதற்கு முன் எவரும் பெற்றிராத, இதற்கு முன் எந்த நடுவராலும், தேர்வுக்குழுவாலும் தெரிவு செய்யப்பட்டிராத விருதை வென்றிருக்கும் மோடியை பாராட்டுகிறேன். இந்த விருதில் இதற்கு முன் கேள்விப்பட்டிராத உத்தரபிரதேச மாநில நிறுவனம் ஒன்றும் உள்ளது”என ராகுல் குறிப்பிட்டார்.
இதன் பின்னர்தான் இந்த விருது பற்றி பலரும் தேடிப்பார்த்தனர். பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பிலிப் கோட்லர் விருது போலியானது என்று தெரிய வந்துள்ளது.
#
பிலில் கோட்லர் என்பவர் நவீன சந்தையின் தந்தை என்று புகழப்பாடுவதாக செய்தி பரப்பப்பட்டது. இவருடைய பெயரால் அமைந்துள்ள நிறுவனம்தான் மோடிக்கு இந்த விருதை கொடுத்துள்ளது. உலகின் முதன் முதலாக இந்த விருதை பெற்றவரும் மோடிதான்.
#
World Marketing Summit India என்ற பெயரில் விருது வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிறுவனத்தை 2017-ஆம் ஆண்டு துவங்கியதே பிலிப் கோட்லர்தான். இந்த தனியார் நிறுவனத்திற்கு அரசு நிறுவனமான கெய்ல் ஸ்பானசர் செய்திருக்கிறது.
இந்த நிறுவனத்தோடு பதஞ்சலி நிறுவனமும், அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியும் தொடர்பில் இருக்கிறது. மொத்தத்தில் பிலிப் கோட்லர் விருது நோபல் பரிசு போல புகழ் பெற்ற பரிசோ அல்லது ரோமன் மகசேச விருது போன்ற புகழ் பெற்ற விருதோ அல்ல. டுபாக்கூர்களால் துவங்கப்பட்டு, டுபாக்கூர்களால் நடத்தப்பட்டு பிரதமர் மோடிக்கு விருது வழங்கியிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

#PhilipKotlerPresidentialAward #PhilipKotler_Award #Prime_minister_Award_modi

ராகுல்காந்தி பற்றி பொய் செய்தி பரப்பிய தினமலர் மற்றும் குருமூர்த்தி!

கொடநாடு கொலைகள் –என்ன செய்வார் ஆளுநர்?

சபரிமலை இடதுசாரிகளின் இரட்டைவேடம்- மோடி காட்டம்!

சபரிமலை சென்ற பெண்கள் மீது தாக்குதல்-மருத்துவமனையில் அனுமதி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*