மோடி அமித்ஷா கேரளம் வருகை!

சபரிமலை போராட்டம் -பெண்களுக்கு எதிரான நடவடிக்கையை ஏற்க முடியாது -சோனியாகாந்தி!

பாஜகவுக்கு இரு பிரதமர் வேட்பாளர்கள் வடக்கில் ராமர்- தெற்கில் அய்யப்பன் ஆனால்?

வரவிருக்கும் 15-ஆம் தேதி கேரள மாநிலத்திற்கு பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் வரவிருப்பதால்  கேரள அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ஆளும் மார்க்சிஸ்ட் அரசு அமல்படுத்த முனையும் நிலையில், பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் பெண்கள் சபரிமலையில் வழிபாடு நடத்தக் கூடாது என்று போராட்டங்களை நடத்த, இது இடதுசாரிகளுக்கும், பாஜகவுக்கும் இடையிலான மோதலாக உருமாற்றம் அடைந்துள்ளது. இந்நிலையில்,  கொல்லம் புறவழிச்சாலையை திறந்து வைக்க மோடி 15-ஆம் தேதி கேரளம் வருகிறார். அவருடன் பாஜக தலைவர் அமித்ஷாவும் வருகிறார்.

இருவரும் பாஜக கட்சி நிர்வாகிகளுடன்  ஆலோசனை நடத்துகிறார்கள்.சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதை பாரம்பரியம் என்று கூறியுள்ள பிரதமர் மோடி இந்த விவகாரத்தை எப்படி கையாள வேண்டும் என்று சில ஆலோசனைகளை தெரிவிக்க இருக்கிறார். மேலும்  27-ஆம் தேதி திருச்சூரில் 18 ஆம் தேதி நடைபெற இருக்கும் பேரணி தொடர்பாகவும் ஆலோசிக்கிறார்கள். இந்த பேரணி கேரளத்தில் பெரும் பதட்டச் சூழலை உருவாக்கும் என்பதால் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளார்கள்.

#PMModi #Amitshah #Sabarimala #WallofEquality #WomensWall #vanithamathil #வனிதாமதில் #சபரிமலை #sabarimala #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence #pinaryvijayan #modi #amithsha

கடும் குளிரில் தமிழகம்  டயாபடிக் நோயாளிகள்-பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட் -Dr.ஃபரூக் அப்துல்லா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*