ராகுலைக் கண்டு அஞ்சி ஓடும் பிரதமர் மோடி!

கடும் குளிரில் தமிழகம்  டயாபடிக் நோயாளிகள்-பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட் -Dr.ஃபரூக் அப்துல்லா

ரஃபேல் விமான பேரம் குறித்து என்னுடன் 20  நிமிடம் பிரதமர் மோடி விவாதம் நடத்த தயாரா என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பப்பு என்று பாஜகவினரால் கிண்டல் செய்யப்பட்டார் ராகுல்காந்தி. ஆனால், இன்று அந்த பப்புவைக் கண்டு முகம் சுழிக்கிறார் பிரதமர் மோடி, இன்னும் சொல்லப்போனால் ஓடி ஒளிகிறார். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக மீதான  நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மோடியை தெறிக்க விட்ட ராகுல், இம்முறை ரஃபேல் விமான பேரத்தை முன் வைத்து பாஜகவை நடுங்க வைக்கிறார்.  நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின்  உரைத்தான் ஹைலைட்.

அதிமுகவினரைப் பற்றி கிண்டல் செய்த ராகுல். அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அதிமுக உறுப்பினர்களின் பின்னால் மறைந்து கொண்டு சிரிக்கிறார் என்றார்.மேலும் ரஃபேல் விமான பேரம் பற்றி பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடந்தால் இரண்டே இரண்டு பெயர்கள்தான் வெளியில் வரும் ஒன்று அனில் அம்பானியில் பெயர் இன்னொன்று பிரதமர் மோடியின் பெயர். ரஃபேல் விமான பேரம் பற்றி மோடி என்னுடன் விவாதம் நடத்த தயாரா வெறும் இருபதே நிமிடம் போதும். நாம் பேசுவோம். மோடி தன் மீது தவறில்லை என்றால் பேசட்டும். நாம் விவாதிப்போம். யார் மீது தவறு இருக்கிறது என்று விவாதிப்போம்.ஆனால், மோடி பேச மாட்டார்”என்று வெளித்து வாங்கினார்.

பதிலளித்து பேசிய அருண் ஜெட்லி  சொன்ன பதில்களையே சொல்லிக் கொண்டிருந்தார். ராகுலை எதிர்கொள்ள முடியாமல் பாஜக பாராளுமன்றத்தில் திணறி வருகிறது.

#nirmalasitharaman #RafaleScamGrandExpose #RafaleScam #ரஃபேல்-ஊழல்,

மோடி தமிழகம் வருகை -கருப்பு நிற பொருட்களுக்கு தடை!

ஸ்டெர்லைட் தரப்பிடம் பணம் பெற்றாரா சீமான்?”

பயனில்லாமல் போன பசுமாடுகள் –மக்களுக்கு வரி!

அதிமுக திமுக உறுப்பினர்கள் மக்களவை மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட்!

முத்தலாக் மசோதா அதிமுக எம்.பிக்களுக்கு பாஜக உத்தரவு!

பெண் தரிசனம் உண்மைதான் –அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்-கேரள முதல்வர் அறிவிப்பு!

ஜெயலலிதா உயிரைக் காக்க அதிமுக தவறிவிட்டது- ஸ்டாலின் குற்றச்சாட்டு!

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*