ராகுல்காந்தி பற்றி பொய் செய்தி பரப்பிய தினமலர் மற்றும் குருமூர்த்தி!

கொடநாடு கொலைகள்என்ன செய்வார் ஆளுநர்?

கொடநாடு கொலைகள்- ஷாயன், மனோஜ் கைது உயிருக்கு ஆபத்து!

துபாயில் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியிடம் ஒரு 14 வயதுப்பெண் கேள்வி கேட்டதாக பரப்பப்படும் பொய் செய்தியின் உண்மை வீடியோ கடந்த 2016 ஆம் வருடம் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் துபாயில் ஒரு நேர்காணல் நடத்தியதாகவும் அந்த நேர்காணலில் ஒரு 14 வயதுப் பெண் ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்டு திணற அடித்ததாக துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி,  தினமலர் ஊடகம் உள்ளிட்ட பலரும் செய்திகளை வெளியிட்டனர்.    அந்த தகவல் போலி என தற்போது சில ஊடகங்கள் ஆய்ந்து தகவல்கள் வெளியிட்டுள்ளன.
அந்த பெண் கேள்வி கேட்டதாக புகைப்படங்கள் வெளியான போதிலும் வீடியோ ஏதும் வெளியாகததால்  சந்தேகம் அடைந்த ஊடகங்கள் புலனாய்வு மேற்கொண்டன. அந்தப் பெண்ணின் பெயர் சித்தி என்பதும் அவர் கடந்த 2016 ஆம் வருடம் பெண் குழந்தைகளை காப்போம் என்னும் தலைப்பில் உரையாற்றிய வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இது தினமலர் நாளிதழ் பத்திரிகையின் கடமையை மறந்து திட்டமிட்டு பாஜகவுக்கு ஆதரவாக பல செய்திகளை உருவாக்கி வருவதை அம்பலப்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன் கேரளாவில் பிந்து, கனக துர்க்கா ஆகிய இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்று வழிபாடு நடத்தியதைத் தொடர்ந்து கேரளாவில் ஆளும் பினராயி விஜயனின் அரசுக்கு எதிராக ஒரு பக்கம் திட்டமிட்டு செய்தியை உருவாக்கி அதை அனைத்து பதிப்புகளிலும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

#Auditor_Gurumurthy #Swaminathan_Gurumurthy #JOURNALIST_GURUMURTHY #Media_Vip_Gurumurthy #Tamil_Political_Weekly_Thuglaq #Tamil_dinamalar #Dinamalar_Daily

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*