வலதுசாரிகளுக்கு சவால் விட்டு வரலாறு படைத்த வனிதா மதில்!

எச்.ஐ.வி இளைஞர் மரணிக்க விடப்பட்டாரா?

ஜெ’ கொலையா தற்கொலையா? விசாரிக்க வேண்டியது யாரை?

#Gaja_Cyclone கேட்டது 15,000 கோடி கொடுத்தது 1,146 கோடி!

பெண் சமத்துவம் பேணவும், சமூக நிலையில் தங்கள் உரிமையை நிலைநாட்டவும், அடையாள அணிவகுப்பை பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட கேரள பெண்கள்  இன்று ஜனவரி 1- புத்தாண்டு அன்று வனிதா மதில் என்ற பெயரில் மனிதச்சங்கிலி அமைத்து உலகிற்கு உணர்த்தியிருக்கிறார்கள். இது அரசியல் ரீதியாக வலதுசாரிகளுக்கு பெண்கள் விடுத்துள்ள எச்சரிக்கையாகவே அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.

 

கேரளாவில் உள்ள புகழ் பெற்ற அய்யப்பன் கோவிலில் 10 முதல் ஐம்பது வயது வரையிலான பெண்கள் வழிபாடு நடத்தக் கூடாது என்று சபரிமலை கோவில் நம்பூதிரிகளும், நாயர்களும் சொல்லி வரும் நிலையில்,  அனைத்து வயது பெண்களும் கோவிலில் வாழிபாடு நடத்தலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்பை கேரள அரசு அமல் படுத்த முனைந்த நிலையில், பாஜக, உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளும், காங்கிரஸ் கட்சியும் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று  போராட்டங்களை நடத்தின. பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் 18 படிகள் ஏறி அய்யப்பனை வழிபடுவது ஆன்மீகத்திற்கு எதிரானது, இந்து மதத்திற்கு எதிரானது என்று பொதுப்புத்தியில் மூட நம்பிக்கையை விதைத்து. பெண்களையே பெண்களுக்கு எதிராக போராடத்தூண்டினார்கள். கேரள முழுக்க  பாஜக, காங்கிரஸ், இந்துத்துவ அமைப்புகள் பெண்களை வைத்து பெண்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்திய நிலையில், இன்னொரு பக்கம் சபரிமலை களேபர பூமியானது. சபரிமலையில் பெண்கள் வழிபடலாம் என்ற உரிமையை நிலைநாட்ட அடையாள ரீதியான போராட்டங்களை முன்னெடுத்த பெண்கள் கேரள போலீசால் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

ஒரு பக்கம் வலதுசாரிகளின் பெண்களுக்கு எதிரான சிந்தனை இன்னொரு பக்கம் ஆளும் இடதுசாரி அரசு பெண்களை திருப்பி அனுப்பியது என்னும் நிலையில். இன்று இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பல லட்சம் பெண்கள் பங்கேற்ற மனிதச்சங்கிலி போராட்டம் இன்று நடந்துள்ளது.

 

கடந்த ஒரு மாத காலமாக கேரளா முழுவதிலும் இவ்வியக்கத்திற்கு ஆதரவு கோரி பிரச்சார இயக்கங்கள் நடந்து வந்தன.
இதைத்தொடர்ந்து இன்று மொத்தம் 620 கிமீக்கு பெண்கள் கைகளை இணைத்து சங்கிலி போல சாலை ஓரம் நின்றனர். கேரளாவில் வடக்கு பகுதியான காசர்கோடு தொடங்கி தெற்கு பகுதியான திருவனந்தபுரம் வரை இந்த சங்கிலி நீண்டது. இதைத்தொடர்ந்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் காசர்கோட்டில் நடக்கும் இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். 4 மணிக்கு பெண்கள் தங்கள் கைகளை இணைக்க தொடங்கி 5 மணி வரை சங்கிலி போல நின்றனர். இந்த வனிதா மதில் நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் உரிமைக்காக ஒன்றாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 

#WallofEquality #WomensWall #vanithamathil #வனிதாமதில் #சபரிமலை #sabarimala #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence,

அக்கா தமிழிசையே அறம் தொலைக்கலாமா?

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*