#2019நாடாளுமன்றதேர்தல் பேச்சுவார்த்தைக்கு திமுக குழு அமைப்பு!

“ சபரிமலை விவகாரத்தில் நாங்கள் தோற்று விட்டோம்” பாஜக அறிவிப்பு!

நாட்டில் நெருக்கடி நிலவுகிறது -சோனியாகாந்தி!

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த திமுக சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
2014-ல் பிரதமராக பதவியேற்ற மோடியின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி நாடு முழுக்க அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. சில கூட்டணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுக “பாசிச பாஜகவை வீழ்த்துவோம்” என்ற கோஷத்தை முதன் முதலாக அரசியல் அரங்கில் முன் வைத்தது. கலைஞர் சிலை திறப்பு விழாவில் தேசிய அளவிலான தலைவர்களை அழைத்து பாஜகவுக்கு எதிராக போர் முழக்கம் செய்தார் ஸ்டாலின். மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி நடத்திய பிரமாண்ட மாநாட்டிலும் பங்கேற்று உரையாற்றினார் ஸ்டாலின்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. அக்கூட்டணியில் மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இக்கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்புகிறவர்களுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசவும் திமுக உயர்மட்டக் குழுவை அறிவித்துள்ளது.
தொகுதி உடன்பாடி பற்றி பேச திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவில் இ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று தேர்தல் அறிக்கையை தயாரிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 8 பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள்.டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி. துரைசாமி, கனிமொழி எம்.பி., திருச்சி சிவா, ஆ. ராசா, டி.கே.எஸ். இளங்கோவன், அ. ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

#2019_elaction #Dmk_parliment_elaction

மதுரை வரும் மோடிக்கு கருப்புக் கொடி –வைகோ அறிவிப்பு!

 

 

டேட்டாதான் இந்தியாவின் எண்ணெய் வளம் -முகேஷ் அம்பானி!

”கொடநாடு சம்பவத்திற்கு திமுகவே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

#Jallikkattu மிரட்டிய மாடு அல்லு கழண்ட இளைஞர்கள்!video

பாஜகவுடன் மோதும் தம்பிதுரை யாருடைய மனச்சாட்சி?

பத்திரிகையாளர் கொலை –சாமியாருக்கு ஆயுள் தண்டனை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*