பெண் தரிசனம் உண்மைதான் –அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்-கேரள முதல்வர் அறிவிப்பு!

ஜெயலலிதா உயிரைக் காக்க அதிமுக தவறிவிட்டது- ஸ்டாலின் குற்றச்சாட்டு!

video இரு இளம் பெண்கள் அய்யப்பனை தரிசித்தனர்- கோவில் மூடப்பட்டது!

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வயது வித்தியாசமின்றி எந்த பெண்கள் வந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி காவல்துறைக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருக்கிறேன் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாஜக –காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காசகோட் முதல் திருவனந்தபுரம் வரையிலான 650 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுமார் 50 லட்சம் பெண்கள் பங்கேற்ற பிரமாண்டமான வனித மதில் கூடுகை நடந்தது. இது இந்தியா முழுக்க கவனத்தை ஈர்த்த நிலையில், இன்று அதிகாலை  மலப்புரத்தைச் சேர்ந்த பிந்து, கனதுர்கா என்ற இரு பெண்கள் விஐபி வாசல் வழியாகச் சென்று அய்யப்பன் சந்நிதானத்தில் வழிபாடு நடத்தினார்கள். இதையொட்டி கோவில் நடை சாத்தப்பட்டு தோஷம் கழிக்க பரிகாரப்பூஜைகள் நடைபெற்றது. இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறும் போது :-

“இன்று காலை அய்யப்பன் சந்நிதானத்தில் இரு பெண்கள் வழிபாடு நடத்தியுள்ளது உண்மைதான். சபரிமலை கோவிலுக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் முடிந்தவரை பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.இந்த உத்தரவு முன்கூட்டியே இடப்பட்டுள்ளது” என்றார்.

#WallofEquality #WomensWall #vanithamathil #வனிதாமதில் #சபரிமலை #sabarimala #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence, #WallofEquality #WomensWall #vanithamathil #வனிதாமதில் #சபரிமலை #sabarimala #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence #Bindu #Kanakadurga

வலதுசாரிகளுக்கு சவால் விட்டு வரலாறு படைத்த வனிதா மதில்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*