video இரு இளம் பெண்கள் அய்யப்பனை தரிசித்தனர்- கோவில் மூடப்பட்டது!

அதிகாலை அய்யப்பன் கோவிலில் வழிபட்ட இளம் பெண்கள்!

அதிகாலை அய்யப்பன் கோவிலில் வழிபட்ட இளம் பெண்கள்!

Posted by Tamilarasial on Tuesday, January 1, 2019

பெண்கள் வழிபாடு நடத்தக்கூடாது என பாஜக உள்ளிட்ட வலதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் கூறி வந்த நிலையில், பிந்து, கனதுர்கா என்ற பெயருடைய இரு பெண்கள் இன்று அதிகாலை  18 படியேறி அய்யப்பன் சந்நிதானத்தில் வழிபாடு நடத்தினார்கள்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உச்சநீதிமன்றம் அனைவரும் வழிபாடு நடத்தலாம் என தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், பாஜக உள்ளிட்ட வலதுசாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று 650 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுமார் 50 லட்சம் பெண்கள் பங்கேற்ற வனிதா மதில் போராட்டம் நடந்தது. இந்தியா முழுக்க பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், இன்று அதிகாலை 3-45  மணியளவில்  42 வயதுடைய பிந்துவும்,  44 வயதுடைய கனகதுர்காவும், அய்யப்பன் கோவிலுக்குள் 18 படியேறி சந்நிதானத்தில் அய்யப்பனை தரிசனம் செய்திருக்கிறார்கள். அவர்கள் சந்நிதானத்திற்குள் நுழையும் விடியோக்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் நாங்கள் அய்யப்பனை தரிசித்தோம் என்று ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக வழங்கிய நேர்காணலில் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தொடர்ந்து பல மாதங்களாக பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் பெண்களுக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், பெண்களே இப்போது களத்தில் இறங்கி போராடத்துவங்கி விட்டார்கள்.பெண்கள் வழிபட்டத்தைத் தொடர்ந்து கோவில் நடை சாத்தப்பட்டது. கோவில் அரசு சொத்து அதை பூட்டும் உரிமை எவருக்கும் இல்லை என்ற நிலையில் சில நாயர்களும், நம்பூதிரிகளும் கோவில் நடையை பூட்டியுள்ளார்கள்.

#WallofEquality #WomensWall #vanithamathil #வனிதாமதில் #சபரிமலை #sabarimala #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence,

#Bindu #Kanakadurga

 

வலதுசாரிகளுக்கு சவால் விட்டு வரலாறு படைத்த வனிதா மதில்!

எச்.ஐ.வி இளைஞர் மரணிக்க விடப்பட்டாரா?

ஜெ’ கொலையா தற்கொலையா? விசாரிக்க வேண்டியது யாரை?

#Gaja_Cyclone கேட்டது 15,000 கோடி கொடுத்தது 1,146 கோடி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*