அதிமுக கூட்டணி- எச்சரித்த அமித்ஷா!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு  ஐந்து தொகுதிகளை அதிமுக ஒதுக்கிய நிலையில் பாஜகவுக்குள் அதிருப்தி உருவாகி இருக்கிறது. அதிமுக  துணை முதல்வரை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார் அமித்ஷா.வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி ஏற்கனவே முடிவான ஒன்றுதான். ஜெயலலிதா மரணத்தின் பின்னர் பாஜக கட்டுப்பாட்டினுள் சென்ற அதிமுக பாஜகவுடன் கூட்டணியை விரும்பவில்லை. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக தயவில்தான் மைனாரிட்டி அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருப்பதால், பாஜகவுடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக உள்ளது. எப்படியும் அதிமுகவை மிரட்டி 15 தொகுதிகளைப் பெற்று அதில் பத்து தொகுதிகளாவது  வென்று விடலாம் என நினைத்த பாஜகவின் ஆசையில் மண் போட்டது அதிமுக. ஐந்து தொகுதிகளை மட்டுமே ஒதுக்கிய அதிமுக பாமகவுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கியது.

தவிறவும் பாமக அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்றது. பாஜக பற்றி வாய் திறக்கவே இல்லை. இதனால் கடுப்பான பாஜக அதிமுகவை கடுமையாக  எச்சரித்துள்ளது.காரணம் அதிமுகவுடன் முதன் முதலாக கூட்டணி பேச்சுவார்த்தையை துவங்கியது பாஜகதான். ஆனால், தான் கேட்கும் இடங்கள் இடைத்து அனைத்தும் நடந்து விடும் என்று பாஜக எதிர்பார்த்த நிலையில், பாஜகவுக்கு தெரியாமல் பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி ஏழு தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்கியது அதிமுக. மேலும் பாட்டாளி மக்கள் கட்சி “அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் நாங்கள் இணைந்துள்ளோம்” என்றது. அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜகவுடன் தன்னை அடையாளப்படுத்தாமல் பாமக வெல்ல நினைத்தது. இது பாஜகவை கடுப்பேற்ற பன்னீர்செல்வத்தை அழைத்த அமித்ஷா அவரை மட்டும் அமர வைத்து விட்ட அவருடன் வந்த அதிமுக பிரமுகர்களை நிற்க வைத்து அமித்ஷா பேசினார். அப்போது அங்கிருந்த சேர்களில் பாஜக பிரமுகர்கள் அமர்ந்தபடியே பேசினார்கள்.

பன்னீர்செல்வத்தை அழைத்த அமித்ஷா”பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியோடுதான் தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்கிறோம். இதில் பாஜகதான் தலைமை, மோடி பங்கேற்கும் தமிழக பிரச்சாரக்கூட்டத்தில் கட்சியின் அனைத்து பிரமுகர்களும், எம்.பி. எம்.எல்.ஏக்கள் உட்பட கூட்டணி கட்சி தலைவர்களும், முதல்வர் துணை முதல்வரும் பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டார். இதை அடக்கமாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பன்னீர்செல்வம் தலையை ஆட்டி ஆமோத்தபடி வெளிறிய முகத்தோடு அங்கிருந்து வெளியேறினார்.

#2019_Parliment_elaction #pmk_admk #bjp_adimk

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*