அதிருப்தி அதிக தொகுதிகளைக் கேட்கும் பாஜக!

அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள்  விறுவிறுப்பு அடைந்துள்ளன. அதிமுக தன் கூட்டணியில் முதன் முதலாக இடம் ஒதுக்கியது பாட்டாளி மக்கள் கட்சிக்குத்தான் 7 தொகுதிகளை பாமகவுக்குக் கொடுத்த அதிமுக, பாஜகவுக்கு 5 தொகுதிகளைக் கொடுத்தது. அதிமுக தலைமையில் கூட்டணி என்று பாமக சொன்னதோடு, 50 வகை உணவுகளுடன் பிரமாண்ட விருந்தையும் பாமக தலைவர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் நடத்தினார். அந்த விருந்தில் முதல்வர், துணைமுதல்வர் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர். ஆனால், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து தொகுதிகளிலும், அதிமுக தலைமையில் கூட்டணி என சொல்லப்படுவதிலும் அதிருப்தி அடைந்துள்ளது.பாமகவுக்கு 7 தொகுதிகளை அள்ளிக் கொடுத்து விட்ட நிலையில் பிற கட்சிகளுக்கு எத்தனை  தொகுதிகளை ஒதுக்குவது எனத் தெரியாமல் திணறுகிறார்கள் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும். தேமுதிகவோ எங்களுக்கு பாமகவை விட ஒரு தொகுதி கூடுதலாக வேண்டும். என்பதில் உறுதியாக உள்ளார்கள்.  ஒட்டு மொத்தமாக இங்குள்ள அரசியல் கட்சிகளை அதிமுக கையாள்வதை பாஜக விரும்பவில்லை. அதனால் தேமுதிகவை நாங்கள் கையாண்டு கொள்கிறொம். மொத்தமாக எங்களுக்கு 12 தொகுதிகள் கொடுத்து விடுங்கள் என்று இன்று முதல்வரைச் சந்தித்து தமிழிசை கோரிக்கை வைத்தார்.

மொத்தத்தில் பாமககூட்டணி உருவாகி எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருப்பதாக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் நம்பிக் கொண்டிருந்த நிலையில்  பாஜக அதிக தொகுதிகளைக் கேட்டு நெருக்கடி கொடுக்கிறது. தவிறவும் பாமக அதிமுக தலைமையில் கூட்டணி என்று சொல்வதை பாஜக கண்டிக்கிறது.  தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதை இந்திய அளவில் பாஜகதான் தலைமை தாங்குகிறது. ஒரு மாநிலத்திற்கு மட்டும் ஒரு மாநிலக் கட்சி தலைமை தாங்க முடியாது எனவே, பாஜக தலைமையில்தான் கூட்டணி. எந்த முடிவாக  இருந்தாலும் எங்களைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும் என்று பாஜக அதிமுகவுக்கு உத்தரவிட்டுள்ளது.

#2019_parliment_elaction #2019_elaction

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*