உடுமலை கவுசல்யா அரசுப் பணியிலிருந்து சஸ்பெண்ட்!

பட்ஜெட் -”கரையேறி விட முடியுமா? என கனவு காண்கிறார் மோடி” -ஸ்டாலின் காட்டம்!

ஐந்தே ஆண்டுகளில் மோடியின் அபார சாதனை இதுதான்!

திருப்பூர் மாவட்டர் உடுமலை சங்கரின் மனைவியான கவுசல்யா வெலிங்டன் ராணுவ மையத்தில் பணி செய்து வந்தார். இப்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகில் உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கரும்,  மதுரையைச் சேர்ந்த கவுசல்யாவும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இதனால் கடுப்பான கவுசல்யாவின் குடும்பத்தினர் சங்கரை கவுரவப்படுகொலை செய்தனர். இக்கொலை இந்தியா முழுக்க அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கவுசல்யாவுக்கு நிதி உதவியும், சங்கரின் தந்தைக்கு அரசு வேலையும், பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடும், கவுசல்யாவுக்கு  குன்னூர் இராணுவ மையத்தில் இள நிலை உதவியாளர் பணியும் வழங்கப்பட்டது.

இக்கொலைக்குப் பின்னர் தன்னை சமூகப் போராளியாக மாற்றிக் கொண்ட கவுசல்யா சாதிக்கு எதிராக தொடர்ந்து  பேசியும் செயல்பட்டும் வந்தார். இதனால் அவருக்கு திராவிடர் கழகங்கள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகளின் ஆதரவும் கிடைத்தது. அதன் பின்னர், கோவையைச் சேர்ந்த பறையிசைக் கலைஞர் சக்தி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். சங்கர் சமூக நீதி அறக்கட்டளை வைத்து செயல்பட்டு வந்த கவுசல்யாவின் இந்த மறுமணம் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது.  இந்நிலையில், ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கவுசல்யா இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகக் கூறி வெலிங்கடன் ராணுவ பணிமனையின் அரசுப்பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

#UdumalaiKowsalya #உடுமலை_சங்கர்கொலை #Udumalai_sankar_murder

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*