உயிருக்கு அஞ்சி சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிட்ட அன்ன அசாரே!

திமுகவுக்கு தூதுவிட்ட பாரி வேந்தர் – ஜெர்க் ஆன திமுக!

“என்னைக் கவர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்” -விஜய் சேதுபதி பெருமிதம்

பாட்டாளி மக்கள் கட்சி- பாஜக கூட்டணி- பேச்சுவார்த்தை அதிமுகவுடன்?

ஊழலுக்கு எதிராக போராடுவதாகக் கூறிக் கொண்டு பாஜக ஆட்சிக்கு வர வழி ஏற்படுத்திக் கொடுத்த அன்ன அசாரே தேர்தல் வருவதையொட்டி மீண்டும் உண்ணா விரத நாடகங்களை அரங்கேற்றி வருகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது டெல்லியில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அன்ன அசாரே துவங்கினார். அவரை பாபா ராம் தேவ், கிரண் பேடி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் ஆதரித்தனர். தேர்தல் நெருங்க நெருங்க இந்த போராட்டம் பாஜக ஆதரவு போராட்டமாக மாறியது. அன்ன அசாரேவும் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதோடு தன் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை சுருக்கிக் கொண்டார். அந்த போராட்டத்தை ஆதரித்தவர்களில் 90% பேர் பாஜக ஆதரவாளர்களாக இருந்த நிலையில், மோடி பதவிக்கு வந்த பிறகு பாபா ராம் தேவ் பெரும் முதலீட்டில் பதஞ்சலி நிறுவனத்தை துவங்கினார். கிரண்பேடிக்கு புதுச்சேரி கவர்னர் பதவி வழங்கப்பட்டது. அன்னா அசாரே முதுபெரும் தியாகி என்ற தோற்றத்துடன் மோடி பதவியேற்ற இந்த ஐந்து ஆண்டுகளும் அவ்வப்போது ஊழலுக்கு எதிரான லோக் பால் மசோதா என்ற டிராமாவை அவ்வப்போது தொடர்ந்து கொண்டிருந்தார்.
ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக வாய் திறக்காத அன்ன அசாரே ஜனவரி 30-ஆம் தேதியில் இருந்து ஊழலுக்கு எதிராக தனது சொந்த ஊரில் மராட்டிய மாநிலத்தில் போராட்டம் துவங்கினாராம் இன்று அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது நான்கு கிலோ எடை குறைந்து விட்டதால் போராட்டத்தை கைவிடும் படி கேட்க கடைசியில் பாஜக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்ட பாஜக அமைச்சர்கள் பழரசம் கொடுத்து அவரின் உண்ணா விரதத்தை முடித்து வைத்தார்களாம்.
அன்ன அசாரே போன்றவர்களை அரசியல் கோமாளிகள் என்று சொன்னால் பலருக்கும் கோபம் வந்தது. காரணம் அவர் காங்கிரஸ் ஆட்சியில் போராடிய போது ஒரு பொய்யான தோற்றம் உருவாகி இளைஞரக்ளே அவரை இந்தியன் தாத்தா ரேஞ்சுக்கு கொண்டாடினார்கள். ஆனால், அதன் பின்னர் நடந்த மோடியின் ஐந்து ஆண்டுகால ஆட்சியை இதே இந்திய இளைஞர்கள் அனுபவித்தார்கள். இதே காலத்தில் அன்ன அசாரேவும் உயிரோடுதான் இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் வராத ஊழலுக்கு எதிரான உணர்வு தேர்தல் நேரத்தில் மட்டும் அன்ன அசாரேவுக்கு வந்து விடுகிறது.
முன்னர் அன்ன அசாரேவை ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்கள் இம்முறை கண்டு கொள்ளவில்லை என்பது வேறு.விஷயம் எங்கே செத்துப் போவோமோ என்ற பயத்தில் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார் அசாரே. இந்தியாவில் ஒரு வேளை உணவு கூட இல்லாத ஏழைகள் நிறைந்த நாடு இந்தியா. அதில் மூன்று வேளை உணவு உண்ணும் வசதி உள்ள அசாரே போன்றவர்கள் எத்தனை நாள்தான் சாகும்வரை உண்ணா விரதம் இருப்பார்கள். சாகும்வரை உண்ணா விரதம் என்பதே தாம் கொண்ட கொள்கை நிறைவேறும் வரை உண்ணா விரதம் இருந்து இறந்து போவதுதான். அதைத்தான் ஒப்பற்ற தியாகி திலீபன் ஈழத்தில் செய்தார்.
ஆனால், தன்னை சாகவே விடமாட்டார்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு உண்ணாவிரத நாடகம் நடத்தும் அன்னா அசாரே போன்றவர்கள் கொண்ட கொள்கைக்காக எப்போது உண்மையாக இருக்கப் போகிறார்கள்?
#DevendraFadnavis #AnnaHazare #AnnaHazarefast

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*