எது பெஸ்ட் குக்கரா இரட்டை இலையா?

எப்படி பாகிஸ்தானிடம் பிடிபட்டார் அபிநந்தன்?

நாளை விடுவிக்கப்படுகிறார் அபிநந்தன்!

 “ஞானத்துடன் நடந்து கொள்வோம்” -பாக் பிரதமர் இம்ரான்கான் உரை!

ஜெயலலிதா மரணத்தின் பின்னர் இரட்டை இலை யாருக்கு என்று நிலவி வந்த குழப்பம் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி- துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்குத்தான் இரட்டை இலை என்று தீர்ப்பளித்து தினகரன் அணியினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

அதிமுக பிளவு பட்ட பின்னர் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற சர்ச்சை உருவான போது தேர்தல் ஆணையம் இரட்டை இலையை  ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது. இதற்கு எதிராக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தினகரன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.  டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, மற்றும் சங்கீதா திந்த்ரா செகல் ஆகியோர் அடங்கிய அமர்வு இரட்டையை இலையை  எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு வழங்கியது.

இந்த தீர்ப்பு நிச்சயம் தினகரன் தரப்பிற்கு பின்னடைவுதான் என்ற போதும் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பினர் ஒன்று பட்ட அணியினரா என்ற கேள்வியும் உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக ஒரு அணியாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். ஆட்சியில் இருப்பதால் அதைக் காப்பாற்றிக் கொள்ள இருவரும் இணைந்து நிற்கிறார்கள். ஆட்சியும் காவல்துறையும் கையில் இருப்பதால் கட்சி தலைமையகத்தை தங்கள் வசம் வைத்துக் கொண்டு ஏராளமான பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களையும் தங்கள் பக்கம்  ஈர்த்துக் கொண்டார்கள்.

ஆனால், தினகரன் தமிழகம் முழுக்க சுற்றி வருகிறார்.  அதிமுக ஆளும் கட்சியாக இருப்பதால் மக்களிடம் கடும் அதிருப்தி காணப்படுகிறது. ஆனால், தினகரனுக்கு செல்லும் இடங்களில் பெரும் கூட்டம் கூடுகிறது. தமிழகத்தின் பெரும்பலான இடங்களில் ஓபிஎஸ்-இபிஎஸ் படங்களைத் தவிற பெரும்பாலான இடங்களில் சசிகலா, தினகரன் படங்களே காணப்படுகிறது. இரட்டை இலை தனக்கு இல்லாத நிலையில் குக்கர் சின்னத்தை வைத்தே ஆர்.கே. நகரில் வென்று காட்டிய தினகரன் அணிக்கு இரட்டை இலை கிடைக்காது என்று தெரியும். உண்மையில் இரட்டை இலையை விட மக்கள் மனதில் குறிப்பாக பெண்கள் மனதில் எளிதில் பதியும் சின்னமாக இருந்தது குக்கர்தான். ஆனால், தினகரனுக்கு குக்கர் சின்னத்தையும் கொடுக்காமல் முடக்க பாஜக, அதிமுக விரும்புவதாகத் தெரிகிறது.

அதனால் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னம் கிடைப்பதும் சந்தேகம்தான் இரட்டை இலை இல்லை என்றால் குக்கர் என்று இருந்த தினகரனுக்கு இது போதாத காலம். எப்படி எதிர்கொள்ளப் போகிறார் இந்த தேர்தலை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.’

 

#குக்கர் #தினகரன் #அம்மா_மக்கள்_முன்னேற்றக்கழகம் #Dinkaran

நிர்மலாதேவி என்ன சூப்பர் குற்றவாளியா? – கொதித்த மதுரை உயர்நீதிமன்றம்!

 

”கும்பலிடமிருந்து பாகிஸ்தான் ராணுவமே என்னைக் காப்பாற்றியது”-அபி நந்தன் VIDEO

பிடிபட்ட இந்திய இராணுவ பைலட்டின் விடியோவை வெளியிட்டது பாகிஸ்தான்!

எல்லையில் போர் பதட்டம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*