“என்னைக் கவர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்” -விஜய் சேதுபதி பெருமிதம்

ஸ்டாலினால் மோடியை தோற்கடிக்க முடியும் -அரவிந்த் கெஜ்ரிவால்!

பாசிஸம் 2.0: ஆனந்த் டெல்டும்டே கைது..!

நடிகர் விஜய் சேதுபதி படிப்பிடிப்பிற்காக ஆலப்புழா சென்றார். அங்கு தேசாபிமானி  நாளிதழ் அவரை நேர்காணல் செய்தது. அந்த நேர்காணலில் கேரள முதல்வர் தொடர்பாக அவர் பேசியிருக்கும் கருத்துக்கள் கவனம் ஈர்த்திருக்கிறது. அதன் தமிழாக்கம் இதோ,

”சபரிமலை போன்ற பிரச்சனைகளை கேரள முதல்வர் கையாண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது. எதற்காக இந்த ரகளைகள். நிலம் என்றால் நமக்கு தெரியும் தாய் என்பது. அதிலிருந்து ஒருபிடி மண்ணெடுத்து சிலை செய்கிறார்கள். அதன்பிறகு அந்த சிலை சொல்கிறது நிலம் அசுத்தமானது என்று. இதல்லவா உண்மையில் நடந்தது? ஆணாய் இருப்பது மிக எளிது. நின்று குடித்து மதித்து வாழலாம். ஆனால், பெண்களுக்கு அப்படியல்ல. மாதந்தோறும் பெண்கள் ஒரு வலியை அனுபவிக்க வேண்டும். நமக்கு தெரியும் அது எதற்கான வலி என்பது. அது பரிசுத்தமானது. பெண்களுக்கு அப்படியொரு சிறப்பு இல்லாமல் போனால் நம்மில் எவரும் இங்கே இருக்க மாட்டோம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேரள முதல்வருடன் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கடந்து சென்றபோது ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரைப் போல எனக்கு தோற்றமளித்தார். கேரளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் கஜா புயல் தாக்கியது. அப்போது பத்துகோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு வழங்கினார். அதற்காக அவருக்கு எப்போதும் நான் நன்றி உள்ளவனாக இருப்பேன்”

– திரைக்கலைஞர் விஜய் சேதுபதி

 

#விஜய்சேதுபதி #WallofEquality #WomensWall #vanithamathil #வனிதாமதில் #சபரிமலை #sabarimala #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence #vijayseythupathy

 

உடுமலை கவுசல்யா அரசுப் பணியிலிருந்து சஸ்பெண்ட்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*