எப்படி பாகிஸ்தானிடம் பிடிபட்டார் அபிநந்தன்?

எது பெஸ்ட் குக்கரா இரட்டை இலையா?

நாளை விடுவிக்கப்படுகிறார் அபிநந்தன்!

இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் போர்ப்பதட்டம் அதிகரித்த நிலையில் பாகிஸ்தான் படைகளிடம் சிக்கிய சென்னையைச் சேர்ந்த இராணுவ வீரர் அபிநந்தன் நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். என்றாலும் எல்லைக்குள் என்ன நடந்தது ? எப்படி அபிநந்தன் பிடிபட்டார்? என்பது பற்றிய தகவல்கள் ரகசியமாகவே உள்ளது. இப்போது அந்த சம்பவத்தை நேரில் பார்த்த பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வாக்குமூலத்தை பிபிசி செய்தி தளம் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரின் பிம்பர் மாவட்டத்தில் உள்ள ஹெரான் கிராமத்தைச் சேர்ந்த 58 வயதாகும் மொஹமத் ரசாக் அளித்துள்ள வாக்குமூலத்தின் சுருக்கம்:-
“ விமானம் ஒன்று சுடப்பட்டதையடுத்து ஒருவர் பறந்து நிலத்தை அடைவதை நான் பார்த்தேன். அந்த விமானி உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் எண்ணினேன். அவரது பாராசூட்டில் இந்தியக் கொடி இருப்பதை வைத்து அவர் இந்தியர் என்பது தெரியவந்தது. அவர் நிலத்தில் விழுவதைக் கண்டதும் உள்ளூர் மக்கள் அங்கு விரைந்தார்கள். அவர்கள் அவரை தாக்கி விடுவார்களோ என நான் அஞ்சினேன்.”
“ அவர் தரையிரங்கிய இடத்தில் ஏற்கனவே சில இளைஞர்கள் கூடியிருந்தனர். அவர்களிடம் தான் இந்தியாவில் இருக்கிறேனா என்று அபிநந்தன் கேட்டுள்ளார். அவர்கள் பதில் கூறியவுடன், பாராசூட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அவர், இந்திய தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக முழக்கம் எழுப்பினார். அதற்கு எதிராக லாங் லிவ் பாகிஸ்தான் என்று அந்த இளைஞர்கள் கோஷம் எழுப்பினர்.அப்போது அவர்களை பயமுறுத்த, தன் துப்பாக்கியை எடுத்து வானத்தை பார்த்து சுட்டார் அபிநந்தன். ஆனால், அந்த இளைஞர்கள் கோபமடைந்து கல்லைத் தூக்கி எறிய ஆரம்பித்தனர். அதனால், வானத்தை பார்த்து சுட்டுக் கொண்டே அவர் ஓடத் தொடங்கினார்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் ஓர் ஓடையில் குதித்தார். அப்போது எனது மைத்துனர்களில் ஒருவர், அவரது காலில் சுட்டார். அபிநந்தனை பார்த்து அவரது துப்பாக்கியை கீழே போடும்படி அவர் சொல்ல, அபிநந்தனும் அதை செய்தார்.அப்போது ஓர் இளைஞர், அபிநந்தனை பிடித்தார். அப்போது தனது பாக்கெட்டில் இருந்த சில காகிதங்களை எடுத்து அபிநந்தன் கிழித்ததோடு, சிலவற்றை அவரது வாய்க்குள் அடைத்துக் கொண்டார். ஆனால், அந்த இளைஞர்கள், சில காகிதங்களை அவரிடம் இருந்து பறித்து, பின்பு அதனை ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.எங்கள் இளைஞர்கள் கோபமாக இருந்தனர். அவரை அடித்தும், அறையவும் அவர் அருகில் சென்றனர். சிலர் அதனை தடுக்க முயன்றனர். நானும், அவரை தாக்க வேண்டாம் என்றும் ராணுவம் வரும்வரை அவரை தனியாக வைக்கவும் கூறினேன்” என்றார்.
இப்போது பாகிஸ்தான் அபிநந்தனை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.

#அபிநந்தன் #IAF_Wing_Commander_Abhinandan_Varthaman #Abhinandan_Varthaman

“ஞானத்துடன் நடந்து கொள்வோம்” -பாக் பிரதமர் இம்ரான்கான் உரை!

நிர்மலாதேவி என்ன சூப்பர் குற்றவாளியா? – கொதித்த மதுரை உயர்நீதிமன்றம்!

”கும்பலிடமிருந்து பாகிஸ்தான் ராணுவமே என்னைக் காப்பாற்றியது”-அபி நந்தன் VIDEO

பிடிபட்ட இந்திய இராணுவ பைலட்டின் விடியோவை வெளியிட்டது பாகிஸ்தான்!

எல்லையில் போர் பதட்டம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*