”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே?” –கைவிரித்த மத்திய அரசு!

“நாங்கள் சாதி மதமற்றவர்கள்” இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு சான்றிதழ் பெற்ற தம்பதிகள்!

மோடியின் கோட்டையில் இருந்து நாளை பிரச்சாரத்தை துவங்கும் ராகுல்காந்தி!

அதிமுக தம்பிதுரையின் பாஜக மீதான பொய்க்கோப நாடகங்கள்!

மதுரையில் நடந்த எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவுக்கான செலவுத்தொகையை  மத்திய சுகாதாரத்துறை நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி தமிழக அரசுக்கு வழங்க மறுத்துள்ளது.

முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய நிலையில், 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைப்போம் என்றார். மதுரை தோப்பூர் அருகில் 1264 கோடி செலவில் 201 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என அறிவித்தார். ஆனால், இது வெறும் அறிவிப்பு மட்டுமே இதற்கான நிதியை மத்திய அரசு இன்னும் ஒதுக்கவில்லை. ஆனால், நிதியை ஒதுக்காமல், அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கடந்த மாதம் 27-ஆம் தேதி பிரதமர் மோடி மதுரை வந்து அடிக்கல் நாட்டியதோடு தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். இதற்கான விழா மதுரை ரிங்ரோட்டில் மண்டேலா நகரில் நடந்தது.எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா நடந்த இடத்திலிருந்து நூறு மீட்டர் தொலைவில் பாஜக கட்சியின் பிரச்சாரக் கூட்டமும் நடந்தது.

இந்த விழாவை மத்திய, மாநில சுகாதாரதுறையும் இணைந்து நடத்த வேண்டும் என்பதுதான் மரபு. ஆனால், இந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை கலந்து கொள்ளவில்லை. மாநில சுகாதாரத்துறையும், மதுரை மாவட்ட நிர்வாகமும் இந்த விழாவை நடத்தியது. புதர்மண்டிய இடத்தை சுத்தம் செய்து விழா ஏற்பாடுகளை முடிக்க 1.45 கோடி ரூபாய் செலவானதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தொகையை செலுத்துமாறு மாநில அரசு மத்திய சுகாதாரத்துறையிடம் கேட்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமோ:-

“எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி இன்னும் ஒதுக்கவில்லை, எப்போது நிதி ஒதுக்கிறார்களோ அப்போது இந்த நிதியை தருவோம்” என சுகாதாரத்துறை என்று கைவிரித்து விட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனை வருவதாக பாஜக-அதிமுக இரு கட்சிகளுமே நாடகமாடி வரும் நிலையில், எய்ம்ஸ் ஒரு மோசடி நாடகமோ என்ற அய்யம் மக்களிடம் உருவாகி இருக்கிறது.

#madurai_aims #எய்ம்ஸ்_அடிக்கல்நாட்டுவிழா #எய்ம்ஸ்_மோடி

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*