எல்லையில் போர் பதட்டம்!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பாலகோட் பகுதிக்குள் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் முகாம்களை கூண்டோடு அழித்து விட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்திருக்கிறது. அதன் தலைவர்கள் உட்பட 300 பேரை கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் உறுதிப்படுத்தியிருந்தாலும் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்கிறது. இந்திய எல்லையைக் கடந்து 1971-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை. பாகிஸ்தான் தலைவர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பாலகோட் சிந்து நதிக்கரையை ஒட்டிய வனப்பகுதி ஆகும்.
இது சிந்துவெளி நாகரீக ஆய்வுகள் நடக்கும் தொல்லியல் முக்கியத்துவம் உள்ள பகுதி. அதிகாலை ஐந்து மணியளவில் இங்கு நுழைந்த இந்திய விமானங்கள் வெடிப்பொருட்களை வீசி விட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளதால், இந்திய பாகிஸ்தான் எல்லையில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஐந்து விமான நிலையங்களை அதானியிடம் வழங்கியது மத்திய அரசு?

கூட்டணி விளக்கம் அன்புமணி டென்ஷன்!

துப்புரவு தொழிலாளர்களின் கால்களைக் கழுவினார் மோடி!

காஷ்மீரில் கடும் பதட்டம் இராணுவம் குவிப்பு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*