ஐந்து விமான நிலையங்களை அதானியிடம் வழங்கியது மத்திய அரசு?

கூட்டணி விளக்கம் அன்புமணி டென்ஷன்!

துப்புரவு தொழிலாளர்களின் கால்களைக் கழுவினார் மோடி!

காஷ்மீரில் கடும் பதட்டம் இராணுவம் குவிப்பு!

நாட்டில் உள்ள அரசு சொத்தான விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எடுத்துள்ளது. திருவனந்தபுரம், மங்களூர், கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்பூர் விமான நிலையங்களை முதல் கட்டமாக தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் மாநிலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் விமான நிலையங்களை தனியார்களிடம் ஒப்படைத்து நூறு சதவீதம் முதலீட்டை தனியார்களே வழங்குவார்கள் என்று கூறி அதானியின் நிறுவனத்திற்கு ஐந்து விமான நிலையங்களைக் கொடுத்துள்ளது. நூறு சதவிகித முதலீடு என்பது கற்பனையான ஒன்று காரணம். அதானியின் நிறுவனம் விமானநிலையத்தை நில கிரயம் செய்து புதிதாக உருவாக்கவில்லை. ஏற்கனவே பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்பட்ட முறையான கட்டமைப்பைக் கொண்ட நிறுவனத்தை நூறு சத முதலீடு என்ற பெயரில் அதானிக்கு ஒப்படைக்கிறது அரசு. இப்போது 6 விமானநிலையங்களில் ஐந்து விமான நிலையங்களை அதானி நிறுவனம் கோரியுள்ளது.
#அதானி #ADANI_AIRPORT

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*