ஐந்தே ஆண்டுகளில் மோடியின் அபார சாதனை இதுதான்!

வளர்ச்சிக்கான டிரெயிலர்தான் பட்ஜெட் –மோடி

இளையராஜா ‘75’ பிரமாண்ட ஏற்பாடுகள்!

இந்துக்களின் நாயகனாக, இந்துக்களின் பாதுகாவலனாக புகழப்பட்ட, நம்பப்பட்ட மோடி அரசின் இந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் அதிருப்தி மட்டுமே மிஞ்சியிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியும், உற்பத்தி வீழ்ச்சியும், வேலையிழப்பும்,  ஒரு அவலமாக படர்ந்து வியாபித்து விட்ட நிலையில், மோடி அரசு இடைக்கால பட்ஜெட்டை அறிவித்து சரிந்து விழுந்துள்ள இமேஜை தூக்கி நிறுத்த முயல்கிறது.

இந்து மத உணர்வுகளை வைத்தே காலத்தை ஓட்டி விடலாம் என நினைத்த மோடி பசியும், பொருளாதாரமும் அதை விட முக்கியமானது என்ற  உண்மையை உணர்ந்து கொண்டது போல நடிக்கிறது. அதன் விளைவே இந்த பாசாங்குத்தனமான பட்ஜெட்.

இந்த பட்ஜெட் தொடர்பாக ஊடகங்கள் விய்ந்தோதித்திக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பல கோடி பேர் வேலையிழந்துள்ளது புள்ளிவிபரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

தேசிய புள்ளிவிபர காப்பகத்தின் 2017-18-ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி, மற்றும் வேலைவாய்ப்புக்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட விடாமல் தடுத்து வைத்திருந்தது. இப்போது அந்த அறிக்கை சில ஊடகங்கள் வழியே கசிந்துள்ளது.இந்தியா சுதந்திரத்தின் பின்னர் எந்த அரசும் செய்திராத சாதனையை தனது ஐந்தே ஆண்டுகால ஆட்சியில் மோடி சாதித்திருக்கிறார். பல கோடி பேர் வேலையிழந்ததன் மூலம் அவர் இதனை சாதித்துள்ளார்.

தேசிய புள்ளி விபர ஆணையத்தின் செயல் தலைவராக இருந்த பி.சி. மோகனன், ஆணைய  உறுப்பினர் ஜே.மீனாட்சி ஆகியோர்  புள்ளிவிபரம்  தொடர்புடைய அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட மறுத்ததாகக் கூறி தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்கள். கடந்த டிசம்பரில் வெளியாக வேண்டிய அறிக்கையை ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளார்கள்.ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில் 65 மில்லியன் இளைஞர்கள் வேலையில்லாமல் வருமானம் இன்றி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்து கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

1972- 73 காலக்கட்டத்தில் வேலையில்லா திண்டாட்டம் 5.18 சதவீதமான இருந்தது.  வேலையின்மை அதிகரித்திருந்த அக்காலத்தில் இந்தியா பாகிஸ்தான் போரால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்தது. ஆனால், போர் எதுவும் இல்லாத இராணுவ நெருக்கடிகள் எதுவும் இல்லாத 2017-18 ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி காரணமாக 1973-ஆம் ஆண்டை விட வேலைவாய்ப்பின்மை மிக மோசமான வளர்ந்திருக்கிறது. 1973-ஆம் ஆண்டை விட 2017-18-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை 6.1 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

வேலையின்மை நகர்ப்புறங்களில் 7.8 சதவிகிதமாகவும், கிராமப்புறங்களில் 5.3 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. கிராமப்புற பெண்களில் வேலையின்மை விகிதம் 13.6 சதவிகிதமாக உள்ளது.  இந்த புள்ளிவிபரங்களை வெளியிட விரும்பாத மத்திய அரசு இந்த புள்ளிவிபரங்களை திருத்தி வெளியிட உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  “ஆண்டு தோறும் 2 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்” என்ற மோடி அரசு சுதந்திர இந்தியாவில் எந்த பிரதமரும் செய்யாத சாதனையை ஐந்தே ஆண்டுகளில் சாதித்துள்ளார்.

நான் ஆட்சிக்கு வந்தால் கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் கொடுப்பேன் என்று சொன்ன மோடி மக்களை ஓட்டாண்டி ஆக்கி. வேலையின்மை என்ற கொடும் நோயை இந்திய இளைனஞர்களுக்கு வழங்கியிருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

 

#Poverty_in_India #Unemployment #Uemployment

ஜாக்டோ ஜியோ போராட்டமும் சமூக ஊடகங்களும்-அ.மார்க்ஸ்

தமிழிசையை அவமானப்படுத்திய பாஜக ஆதரவு தினமலர்!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*