கமல் ஸ்டாலினை சீண்டுவது ஏன்?

சென்னை  திரும்பிய விஜயகாந்த் உடல் நிலையில் சிக்கல்!

மக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அரசியல் பேச அஞ்சிய நடிகர் கமல்ஹாசன் தனது திரைப்படங்களுக்கு ஜெயலலிதா தரப்பில் இருந்து நெருக்கடி வந்தால் திமுக தலைவர் கருணாநிதியின் ஆதரவைப் பெற்று தன்னை தற்காத்துக் கொண்டவர். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை தன்னை கருணாநிதியின் நண்பன் போலவும் திராவிட இயக்க ஆதரவாளன் போலவும் காட்டிக் கொண்டிருந்த கமல் ஜெயலலிதா மரணத்தின் பின்னர் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். ஸ்டாலினுடனும் நெருக்கம் போல காட்டிக் கொண்ட கமல் சமீபகாலமாக ஸ்டாலினை கடுமையாக கேலி கிண்டல் செய்து வருகிறார். சென்னை ஆர்.ஏ புரத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசிய கமல்:-
“இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை இப்போதே முடிவு செய்ய வேண்டும். நான் தாமதமாக அரசியலுக்கு வந்ததை நினைத்து வருந்துகிறேன்.நான் சட்டசபைக்கு வந்தால் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வரமாட்டேன், அப்படியே வந்தாலும் வேறு சட்டையை மாட்டிக் கொண்டு வருவேன்” என்று திமுக தலைவர் ஸ்டாலினை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திற்குள் ஸ்டாலினின் சட்டைகிழிக்கப்பட்ட நிலையில் அவர் கிழிந்த சட்டையோடு வெளியில் வந்தார். இதைத்தான் கமல்ஹாசன் கிண்டல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பிய கமல் திமுகவுக்கு மீடியேட்டர்கள் மூலம் தூது விட்டார். தங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று உதயநிதி ஸ்டாலினை யும் சபரீசனையும் கமல்ஹாசனின் மீடியேட்டர்கள் தொடர்பு கொண்டு பேரம் பேச. அவர்களோ இந்த தேர்தலில் எங்களுக்கு ஆதரவு அளியுங்கள் சட்டமன்ற தேர்தலில் கட்சியில் பேசி உங்களுக்கு தொகுதிகள் சிலதை வாங்கித் தருகிறோம், காரணம் நீங்கள் இன்னும் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட வில்லை. உங்களின் வாக்கு வங்கி என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆகவே எங்களை ஆதரியுங்கள் பின்னர் பார்க்கலாம் என்று அனுப்ப. கமல் ஸ்டாலினை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால், அவரிடம் இருந்து இதே பதில் செல்ல கடுப்பான கமல் ஸ்டாலினை கழுவி ஊத்த ஆரம்பித்தார்.

#kamalhasan #makkal_neethi_mayyam #kamal #makkaL_neethi_mayyam #மக்கள்நீதிமய்யம் #கமல்,

வாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*