காணாமல் போன முகிலன் மத்திய மாநில அரசுகள் மீது ஸ்டாலின் சந்தேகம்!

சமூக ஆர்வலரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திவீரமாக செயல்பட்டு வந்தவருமான முகிலன் காணாமல் போய் பல நாட்கள் ஆன நிலையில்,  அது தொடர்பாக சமூக வலைத்தளங்களில்பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அணு உலை போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் என இந்த போராட்டங்களில் தீவிரமாக பணி செய்தவர் முகிலன். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக போராடிய மக்கள் மீது கடந்த ஆண்டு மே-22 ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 13 பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பாக ஆவணம் ஒன்றை சென்னையில் வெளியிட்ட முகிலன் மதுரைக்கு ரயில் ஏறிய நிலையில் காணாமல் போயுள்ளார். அவரை ஸ்டெர்லைட் நிர்வாகம் கடத்தியிருக்கலாம். அல்லது  தமிழக அரசின் உதவியோடு பல்வேறு பிரச்சனைகளுக்காக போராடும் முகிலனை போலீசே கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகங்கள் உருவாகி வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,

//சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஆதாரங்களை வெளியிட்ட #Mugilan காணாமல்போய் இதுவரை எங்கிருக்கிறார் என தெரியவில்லை. கருத்துரிமையை நசுக்கும் மத்திய மாநில ஆட்சியில்,சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்போர் அவரை மீட்க வேண்டும்.அதுவரை சந்தேகம் உங்கள் மீதே!//  என்று பதிவு செய்துள்ளார்.

#mugilan #WhereIsMugilan

ராமதாசுக்கு எதிராக காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் ஆலோசனை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*