காஷ்மீரில் கடும் பதட்டம் இராணுவம் குவிப்பு!

Srinagar: A woman seeks permission from a security man during curfew and strike on 8th consecutive day in Srinagar on Saturday. PTI Photo by S Irfan (PTI7_16_2016_000096B)

அதிருப்தி அதிக தொகுதிகளைக் கேட்கும் பாஜக!

முகிலனுக்கு என்ன நடந்திருக்கும்?

காஷ்மீர் மாநிலம் முழுக்க இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு அசாதரண சூழல் உருவாகி உள்ளது. ஆளுநர் சத்யபால் மாலிக் மக்கள் அஞ்ச வேண்டாம் என்று அறிவித்திருந்தாலும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில் கடுமையான பதட்டம் உருவாகி உள்ளது.
காஷ்மீர் புல்வாமாவில் சமீபத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைச்சேர்ந்த தீவிரவாதி ஒருவர் நடத்திய தாக்குதலில் 40 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். இது காஷ்மீருக்குள் கடும் பதட்டத்தையும் இந்திய பாகிஸ்தான் எல்லையில் கடுமையான பதட்டத்தையும் உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத இயக்க தலைவர்கள் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு மாநில அரசால் விலக்கி கொள்ளப்பட்டது.காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35-ஏ சட்டப்பிரிவை பாஜக உள்ளிட்ட வலதுசாரிகள் நீண்டகாலமாக எதிர்த்து வரும் நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் காஷமீரில் யாசின் மாலிக், ஜமாத் இ இஸ்லாமி தலைவர் அப்துல் ஹமீது பயாஸ், குலாம் காதிர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

#kashmir #india_kashmir #

காணாமல் போன முகிலன்் மத்திய மாநில அரசுகள் மீது ஸ்டாலின் சந்தேகம்!

அதிமுக கூட்டணி -எச்சரித்த அமித்ஷா!

ராமதாஸ் விருந்து முடிந்து திரும்பிய தலித் எம்.பி மரணம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*