காஷ்மீர் பயங்கரவாத  தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்?

காஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் பலி!

”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே?” –கைவிரித்த மத்திய அரசு!

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கார்கில் போர் நடத்தி தேர்தலில் வென்றது போல இன்னொரு போரை நடத்தும் சதி வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் காஷ்மீர் மாநிலத்தில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக எழுந்துள்ளன.

காஷ்மீர் மாநிலம் காஷ்மீர் –ஜம்மு நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் சுமார் 2,500 க்கும் அதிகமான சி.ஆர்.பி.எப்ஃ  படைவீரர்கள் ஸ்ரீநகர் முகாமை நோக்கி  சென்று கொண்டிருந்தனர். அப்போது புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற  பகுதியில் வைத்து தேசிய நெடுஞ்சாலை வழியே 350 கிலோ வெடிப்பொருட்கள் நிரம்பிய வாகனத்தை மோதச் செய்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 44 இந்திய ஜவான்கள்  உயிரிழந்துள்ளார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுடம் ஒரு போர் நடகுமோ என்ற எண்ணம்  கடந்த பல மாதங்களாக  இருந்து வந்த நிலையில், காஷ்மீர், ஸ்ரீநகர் தேசிய  நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற  வாகனங்களுக்கு மத்தியில் வெட்குண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி திவீரவாதிகள் தாக்குதல் நடத்தியதில்  40 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக கூறபப்டுகிறது.

ஏன்? எப்படி இந்த தாக்குதல் சாத்தியம் என்ற எண்ணம் இந்தியா முழுக்க பரவலாக மக்களிடமே உருவாகி இருந்தாலும், தேசிய ஊடகங்கள் எனப்படும் பாஜக ஊடகங்கள் போர் வெறியை உருவாக்கி வருகிறது.

#

மோடி பதவியேற்ற இந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிலான பிரமாண்டமான இந்த தாக்குதல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் எப்படி சாத்தியம்?

#

இந்தியாவிலேயே அதி உச்ச பாதுகாப்பு வலயமைப்பு பகுதி காஷ்மீர். அதுவும் தேசிய    நெடுஞ்சாலை அதி உச்ச எச்சரிக்கை மற்றும் கண்காணிப்புகள் நிறைந்த பகுதி, இந்த பகுதிக்குள்  வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தை ஒருவர் கொண்டு வந்து மோதுகிறார் என்றால் அது  இராணுவத்தினர் தரப்பில்  இருந்து  உதவி இல்லாமல் இப்படி ஒரு தாக்குதலை திவீரவாதிகளால் நடத்த முடியுமா?

#

ரோந்து செல்லும் போது அல்ல, ராணுவ அணிவகுப்பிற்குள் புகுந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . இது நம்பும் படியாகவா இருக்கிறது. அணிவகுப்பினுள் புகுந்து தாக்கும் அளவுக்கா இந்திய இராணுவம் இருக்கிறது?

#

சுமார் 300 கிலோ வெடிகுண்டுகளுடன் ஒருவர் தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்து தாக்குகிறார் என்றால் நமது பாதுகாப்புத்துறை எப்படி மக்களை பாதுகாக்க முடியும்?

 

ராணுவ வீரர்கள் பல வாகனங்களில் வரும் போது மிகச்சரியாக உட்புகுந்து தாக்குதல் நடந்திருக்கிறது. அப்படி என்றால் அந்த வாகனம் அதுவரை காத்திருந்ததா?

#

காஷ்மீர் மாநில உளவுத்துறை இப்படி ஒரு தாக்குதலுக்கான திட்டம் இருபப்தாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாகவும் , ஆனால், அந்த எச்சரிக்கையை மத்திய உள்துறையும் , உளவுத்துறையும் பொருட்படுத்தவில்லை என்றும்  செய்திகள் வெளியாகி உள்ளது.

#

வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தை ஓட்டி வந்தவர் அடில் அகமது என்றும் அவர் புல்வாமா மாவட்டம் காம்க்கிபோரா பகுதியைச்ச் சேர்ந்தவர் என்றும்  தாக்குதல் நடந்த சில மணி  நேரங்கள் செய்திகள் வெளியானது எப்படி?

இந்த தாக்குதல் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா என்ற அய்யம் மக்களிடம் எழுந்திருக்கிறது!

இந்த கொடூர தாக்குதல் தொடர்பாக சி.ஆர்.பி.எஃப் இராணுவ படைப் பிரிவின் செய்தி தொடர்பாளர் ஆஷிஷ் குமார் பேசும் போது:-

“78 வாகனங்களில் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ராணுவ வீரர்கள் ஸ்ரீநகரில் உள்ள பக்‌ஷி ஸ்டேடியம் டிரான்சிட் கேம்பிக்கு செல்வதற்காக புறப்பட்டுள்ளனர். அப்போது மணி அதிகாலை 3.30 விடுமுறைக்காலத்தை முடித்த பல வீரர்கள் பணிக்குத் திரும்பி அவர்க
ளை முகாம்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக 350 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பயணம் நடக்கும். பக்‌ஷி கேம்புக்கு செல்வதற்கு 30 கிலோ மீட்டர்  இருந்த நிலையில், ஜெய்ஷ் –இ- முகமது என்ற அமைப்பைச் சேர்ந்த அடில் அகமது கார் என்ற ஒரு நபர் விளையாட்டு பொருட்களுக்கு மத்தியில் மறைத்து வைத்து கொண்டு வந்த 350 கிலோ எடையுள்ள வெடிபொருட்களுடன் இராணுவ வீரர்கள் வந்த வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதில் 44 பேர் பலியாகி உள்ளார்கள். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வீரர்கள் பயணிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்டிருந்தது.சுமார் ஒரு வார காலமாக ஜம்மு-காஷ்மீர்  நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அனைத்து நடமாட்டங்களும் கண்காணிக்கப்பட்ட பின்னரே நேற்று வீரர்கள் பயணத்தை துவங்கினார்கள். தேசிய நெடுஞ்சாலையில் இப்படி ஒரு தாக்குதல் நடக்க வாய்ப்பே இல்லை. ஏராளமான சோதனைச்சாவடிகள் நிரம்பிய  இந்த இடத்தில் நூற்றுக்கணக்கான கிலோ வெடிப்பொருட்கள் நிரம்பிய வாகனத்தை கொண்டு வர வாய்ப்பே இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது. இட்ல்லை என்றால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்”என்று அறிவித்தார்.

#kashmir_attack

 

“நாங்கள் சாதி மதமற்றவர்கள்” இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு சான்றிதழ் பெற்ற தம்பதிகள்!

மோடியின் கோட்டையில் இருந்து நாளை பிரச்சாரத்தை துவங்கும் ராகுல்காந்தி!

அதிமுக தம்பிதுரையின் பாஜக மீதான பொய்க்கோப நாடகங்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*