காஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் பலி!

Secirity personnal near awantipora blast site. Express Photo by Shuaib Masoodi 14/02/2019

”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே?” –கைவிரித்த மத்திய அரசு!

“நாங்கள் சாதி மதமற்றவர்கள்” இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு சான்றிதழ் பெற்ற தம்பதிகள்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப் படை வீரர்கள் மீது திவீரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனால் காஷ்மீரில் கடும் பதட்டம் உருவாகி உள்ளதோடு இந்திய அரசு மட்டத்திலும் கடும் பதட்டம் எழுந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் ரோந்து செல்வது வாடிக்கை. அப்படி 70 வாகனங்களில் வீரர்கள் சென்று கொண்டிருந்த போது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை தீவிரவாதி ஒருவர் வேகமாக ஓட்டி வந்து இராணுவ வாகங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் நாலா பக்கமும் வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தை ஓட்டி வந்தவர் அடில் அகமது எனவும் அவர் புல்வாமா மாவட்டம் காக்கிபோரா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இத்தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


இன்னொரு பக்கம் காஷ்மீர் மக்களின் வாழ்வும் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. இத்தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஒட்டு மொத்த நாடும் தோளோடு தோள் நிற்கும். வீரர்களின் தியாகம் வீண் போகாது” என குறிப்பிட்டுள்ளார். இத்தாக்குதலையொட்டி நாளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காஷ்மீர் செல்கிறார்.
இந்நிலையில், காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகர் கே.விஜயகுமார் இத்தாக்குதல் பற்றி பேசும் போது:-
“ பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏதும் இல்லை.”என தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் தொடர்பாக நாளை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது”

#kasmir_attak #காஷ்மீர்_தாக்குதல்

மோடியின் கோட்டையில் இருந்து நாளை பிரச்சாரத்தை துவங்கும் ராகுல்காந்தி!

அதிமுக தம்பிதுரையின் பாஜக மீதான பொய்க்கோப நாடகங்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*