கூட்டணி விளக்கம் அன்புமணி டென்ஷன்!

துப்புரவு தொழிலாளர்களின் கால்களைக் கழுவினார் மோடி!

காஷ்மீரில் கடும் பதட்டம் இராணுவம் குவிப்பு!

திமுக, அதிமுக இரு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்த பாட்டாளி மக்கள் கட்சி வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. 7 நாடாளுமன்ற தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை தொகுதிகளையும் பாஜக-அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கும் நிலையில்,  அதிமுக கூட்டணில் ஏன் இணைந்தோம் என்று விளக்கம் அளிக்க பத்திரிகையாளர் சந்திப்பை அன்புமணி ராமதாஸ் நடந்த்தினார்.

அப்போது செய்தியாளர்கள் அவரிடம் சராமரியான கேள்விகளை எழுப்பினார்கள். மதுவுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் நீங்கள் குட்கா ஊழல் செய்திருக்கும் அதிமுகவோடு கூட்டணி வைத்திருக்கின்றீரக்ளே? அதிமுக ஊழல் கட்சி என்பதை மறுக்கின்றீர்களா? ஏற்றுக் கொள்கின்றீர்களா? இரு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று விட்டு  இப்போது எப்படி கூட்டணி வைத்தீர்கள்? அதிமுகவுக்கு எதிராக ஆளுநரிடம் மனுக் கொடுத்தீர்களே அது ஏன்? அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியமைக்காக மன்னிப்புக் கேட்பீர்களா? என்பன உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டன.

ஒரு கட்டத்தில் கேள்விகளுக்கு பதில்  சொல்ல முடியாமல் திணறிய அன்புமணி ஊடகங்கள் மீது பாய்ந்தார். “அனைத்திற்கும் எல்லையுள்ளது அமைதியாக இருங்கள்” என்றார்.

எல்லை மீறி கேட்கின்றீர்கள் என்று கோபமடைந்தார்.  ஊடகவியலாளர்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் அதிக கேள்விகளைக் கேட்டு ஒரு ஊடகச் சந்திப்பை சுவராஸ்யமுள்ளதாக மாற்ற முடியும் . ஆனால் அன்புமணி ராமதாஸ் அவர்களோ எதோ பத்திரிகையாளர்கள் எல்லாம் தைலாபுரம் தோட்டத்து விருந்துக்கு  வந்தவர்களைப் போல நினைத்து விட்டார்.

#அன்புமணிராமதாஸ் #Anpumani_Ramdass #pmk_Bjp_Admk

அதிருப்தி அதிக தொகுதிகளைக் கேட்கும் பாஜக!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*