
இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்றும் தமிழகத்தின் முதல் பொதுவுடமைப் புரட்சியாளர் என்றும் கொண்டாடப்படும் சிங்காரவேலரின் இறந்த தினம் நேற்று (பிப்ரவரி 11) அவர் பிறந்த தினம் பிப்ரவரி 18. சாதித்தலைவர்களின் பிறந்த தினங்களை தேசிய விடுதலை வீரர்கள் என்ற பெயரில் அரசும், அரசியல் தலைவர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நாளில் பிறந்த நாளோ, இறந்த நாளோ ஒரு மாலை மரியாதை இன்றி ஒவ்வொரு ஆண்டு சிங்காரவேலரின் நினைவுதினங்கள் கடந்து செல்கின்றன.
யார் இந்த சிங்காரவேலர்?
#
1860- பிப்ரவரி 18-ம் தேதி மயிலாப்பூர் நடுக்குப்பத்தில் வெங்கடாச்சலம், வள்ளியம்மை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.
#
1884-ஆம் ஆண்டு என்.எஃப்.ஏ பட்டத்தை சென்னை சேத்துப்பட்டில் இருந்த கிறிஸ்தவக் கல்லூரியில் முடித்தார்.
#
1889-ஆம் ஆண்டு அங்கம்மையை காதல் திருமணம் செய்து கொண்டார்.
#
1900-ஆம் ஆண்டு பர்மா டிரேடர்ஸ் என்ற வணிக நிறுவனத்தை துவங்கினார்.
#
1902-ஆம் ஆண்டு அரிசி வணிகத்திற்காக லண்டம் சென்றார். லண்டனில் நடந்த உலக பவுத்த மாநாட்டில் கலந்து கொண்டார்.
#
1907-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்டார்.
#
1917 –ஆம் ஆண்டு இன்பூளுவென்சியா என்னும் கொள்ளை நோய் சென்னை சேரிப்பகுதிகளை தாக்கிய போது தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
#
1921-ஆம் ஆண்டு காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று வழக்கறிஞர் அங்கியை தீயிட்டு கொளுத்தி வழக்கறிஞர் தொழிலை துறந்தார்.
#
1922-ஆகஸ்ட் 22-ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள சிங்காரவேலரின் வீடு ஆங்கிலேயே அரசால் சோதனையிடப்பட்டது.
#
1922- டிசம்பரில் நடந்த கயா காங்கிரஸ் மநாட்டில் பிரதிநிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
#
1923- மே 1-ஆம் தேதி இந்தியாவிலேயே முதன் முதலாக மே தினம் சிங்காரவேலரால் சென்னை உயர்நீதிமன்றத்தையொட்டிய கடற்கரையில் கொண்டாடப்பட்டது.
#
1923 –ல் இந்துஸ்தான் லேபர் கட்சியை துவங்கினார்.
#
1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
#
1924- மார்ச் 6-ஆம் தேதி கான்பூர் ‘போல்ஸ்விக் சதி’ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
#
1924- மார்ச் 6-ஆம் தேதி கழுவு நீர் தொழிலாளர் சங்க (டிரையினேஜ் ஓர்க்கர்ஸ் யூனியன்) கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
#
1925 சென்னை நகராண்மைக் கழகத்திற்கு காங்கிரஸ் சுயராஜ்ஜிய கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு 13-வது யானை கவுனி டிவிசனுக்கு தெரிவானார்.
#
1925- டிசம்பரில் கான்பூரில் நடந்த முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.
#
1926 தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயற்குழு உறுப்பினராக தெரிவானார்.
#
1927 பிப்ரவரியில் இந்தியா வந்த பிரிட்டன் கம்யூனிஸ்ட் சக்வத்வாலா எம்.பி அவர்களை வரவேற்றார்.
#
1927 ஆகஸ்ட் அமெரிக்காவில் சாக்கோ, வான்சிட்டி ஆகியோருக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனையை கண்டித்து கூட்டம் நடத்தினார்.
#
1928-ஆம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு கைதானார்.
#
1930-ஆகஸ்ட் மாதம் சென்னை, திருச்சி, கோவை சிறைகளில் 18 மாதங்கள் அடைக்கப்பட்ட பின்னர் விடுதலையானார்.
#
1931 டிசம்பர் 26-ஆம் தேதி சுயமரியாதை மாநாட்டை துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
#
1932 –ஆம் ஆண்டு சுதேசமித்திரன் அச்சுத்தொழிலாளர் சங்கத்தின் 6-வது ஆண்டு விழாவுக்கு தலைமை தாங்கினார்.
#
1932- மே மாதம் சேலம் சுயமரியாதை மாநாட்டில் தலைமை உரையாற்றினார்.
#
1933 ஜனவரி 15 –ஆம் தேதி காஞ்சிபுரம் சுயமரியாதை மாநாட்டில் சமதர்ம இயக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்.
#
1933-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த நாத்திகர் மாநாட்டிற்கு தலைமையேற்றார்.
#
1933-ஆம் ஆண்டு சிங்கராவேலரின் வீடு போலீசாரால் சோதனையிடப்படுகிறது.
#
1935 ‘புதிய உலகம்’ பத்திரிகை வெளிவர காரணமாக இருந்தார்.
#
1935 சென்னை டிராம்வே எலக்ட்ரிக் சப்ளை தொழிலாளர் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.
#
1937-ஆம் ஆண்டு சென்னை டிராம்வே மின்சார தொழிலாளர் சங்கத்தின் தலைவராக தெரிவானார்.
#
1938 – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்காக கூட்டப்பட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
#
1945 ஜூன் அச்சுத் தொழிலாளர் சங்க மாநாட்டில் தலைமை உரையாற்றினார்.
#
1946 பிப்ரவரி 11-ம் தேதி மயிலாபூர் முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
கம்யூனிஸ்டுகளுக்கும், திராவிட இயக்கத்திற்கும் , சுயமரியாதை இயக்கத்திற்கும் தன் வாழ்நாள் முழுக்க தொண்டாற்றிய சிங்காரவேலரை திராவிட இயக்கமும் கண்டு கொள்ள வில்லை, கம்யூனிஸ்டுகளும் கண்டு கொள்ளவில்லை. சாதித் தலைவர்களின் படங்களுக்கெல்லாம் மாலை போட்டு அவர்களை தியாகிகளாக கொண்டாடும் தமிழக அரசியல் வெளியில் முதல் பொதுவுடமை புரட்சியாளரான சிங்காரவேலர் மறைக்கப்பட்டிருக்கிறார்.
தம்பிதுரையை வைத்து நாடகமாடும் எடப்பாடி பழனிசாமி!
#Malayapuram_Singaravelu_Chettiar #Singaravelu #Singaravelu #Singaravelar
Be the first to comment