சென்னை  திரும்பிய விஜயகாந்த் உடல் நிலையில் சிக்கல்!

வாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது!

அமெரிக்காவில் சிகிச்சை முடித்து  இன்று காலை சென்னை திரும்பிய விஜயகாந்த் உடல் நிலையில்  சிக்கல் நீடிப்பதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த பல வருடங்களாகவே தைராய்ட் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்துக்  கொண்டார். அந்த சிகிச்சையில்  ஏற்பட்ட பக்க விளைவுகள் மேலும் பல பிரச்சனைகளை அவருடைய உடலில் உண்டாக்க பேச்சுத்திறனை இழந்தார் விஜயகாந்த். பல மேடைகளில் எதிர்க்கட்சிகளை வெளித்து வாங்கிய விஜயகாந்தால் தெளிவாகவோ, கோர்வையாகவோ பேச முடியவில்லை. இந்நிலையில், பேச்சுப்பயிற்சி , உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்காக கடந்த இரு மாதங்களாக விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

விஜய்காந்த் அரசியல் கட்சியை துவங்கி தேமுதிகவை உருவாக்கி குறுகிய காலத்தில் தனக்கென தனித்துவமான வாக்கு வங்கியை உருவாக்கி வைத்திருந்தார். 2011 தேர்தலில் அதிமுகவோடு அவர் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆன  சிறிது காலத்தில்  ஜெயலலிதாவுக்கும், அவருக்கும் மோதல் உருவானது. மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான விஜயகாந்தின் தெளிவற்ற  தேர்தல் பிரச்சார உரைகள் மிகப்பெரிய மீம்களாக உலா வந்தன. அதுவரை அவர் குடித்து விட்டு பேசிகிறார் என்றுதான் பொது வெளி நம்பியது. பல அரசியல் கட்சியினரின் குறிப்பாக அதிமுகவினர் விஜயகாந்தை ஒரு குடிகாரர் போல செய்தி பரப்பி  வந்தனர். உண்மையில், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது அதற்காக அவர் எடுத்துக் கொண்ட மருந்துகள் அவரது மன, உள நிலையில் அளர்ச்சியை  உருவாக்குகிறது என்பதை தாமதமாகவே அனைவரும் புரிந்து கொண்டனர். பல காலமாக விஜயகாந்த் உடல் நிலை தொடர்பான உண்மையை விஜயகாந்தின் மனைவி, மற்றும் அவருடைய தம்பியும் வெளியில் சொல்லாத நிலையில், தான் தொடர்சிகிச்சையில் ஒரு அங்கமாய் அமெரிக்கா சென்றிருந்தார்.

 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில்  அதிமுக- பாஜகவுடன் கூட்டணி பேச விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டியது முக்கியம் என்பதால். அவரது மனைவி அவரை முன்கூட்டியே அமெரிக்கா அனுப்பி சிகிச்சை முடித்து அவரை நார்மலாக்கி தமிழகம் அழைத்து வந்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டார். தொண்டர்களும் இதையே நம்பினார்கள். சிகிச்சை முடிந்து இன்று  சென்னை வருகிறார் என்பதால் தேமுதிக தொண்டர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

 

அதிகாலை முதலே சென்னை விமான நிலையத்தில் தொண்டர்கள் குவிந்தனர். ஆனால் அதிகாலை 1-15 மணிக்கே அமெரிக்காவில் இருந்து அவர் வந்த விமானம் சென்னையில் தரையிறங்கி விட்டது. சுமார் பத்து மணி நேரம் கழித்துதான் விஜயகாந்த் வெளியில் பேட்டரி கார் மூலம் அழைத்து வரப்பட்டார்.  தொண்டர்கள் இதனால் குழப்பம் அடைந்தனர். இடையில் மியாட் மருத்துவமனையில் இருந்து மருத்துவக்குழு விமானநிலையத்திற்குள் சென்று விஜயகாந்தை முழுமையாக பரிசோதனை செய்து சில சிகிச்சைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது.

விஜயகாந்தின் சென்னை வருகை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலாதா விஜயகாந்த்:-

“அதிகாலை மூன்று மணிக்கு வந்தோம், பயணக்களைப்பால் சிறிது  நேரம் அவர் ஓய்வெடுத்தார். விஜயகாந்த் நலமுடன் உள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டு என்பதை விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார். கூட்டணிக்கு நாங்கள் முயற்சிக்கவில்லை. ஆனால், பல கட்சிகள் எங்களுடன் பேசிக் கொண்டுள்ளார்கள்” என்றார்.

ஆனால், விஜயகாந்தால் பேசவோ, நடக்கவோ முடியவில்லை. அவர் உடல் நிலையும் சீராக இல்லை. விமான நிலையத்தில் இருந்து பேட்டரி கார் மூலம் அழைத்து வரப்பட்ட விஜயகாந்தை அவரது காரில் கிட்டத்தட்ட தூக்கி வைத்துதான் அழைத்துச் சென்றார்கள். இந்த காட்சிகளை கண்ட முக்கிய பிரமுகர்களும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். காரணம் நல்ல உடல் நிலையுடன் வருவார்   என்று மனைவியும், தம்பி சுதீஷும் சொல்லி  வந்த நிலையில் சென்றது போலவே திரும்பி வந்திருக்கும் கேப்டனை நம்பி நாடாளுமன்ற தேர்தலில் என்ன  செய்வது எனத் தெரியாமல் குழம்பி நிற்கிறார்கள் தேமுதிக  தொண்டர்கள்.

#vijaykanth #விஜயகாந்த்_உடல்நிலை #தேமுதிக_கூட்டணி #2019_நாடாளுமன்றதேர்தல்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*