“ஞானத்துடன் நடந்து கொள்வோம்” -பாக் பிரதமர் இம்ரான்கான் உரை!

நிர்மலாதேவி என்ன சூப்பர் குற்றவாளியா? – கொதித்த மதுரை உயர்நீதிமன்றம்!

”கும்பலிடமிருந்து பாகிஸ்தான் ராணுவமே என்னைக் காப்பாற்றியது”-அபி நந்தன் VIDEO

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார், அப்போது,
“தவறான கணக்குகள் போடுவதால் ஆபத்துகள் அதிகம், குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் போன்று ஆயுதங்கள் அதிகம் உள்ள நாடுகளில் பதட்ட நிலை அதிகரித்தால் நிலமை கைமீறிச் சென்று விடும், நானோ இந்திய பிரதமர் மோடியோ கூட அந்த நிலையைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே இரு தரப்பும் அமர்ந்து பேசுவதன் மூலமாக மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியும். எனவே இனிமேலாவது கொஞ்சம் நடைமுறை அறிவுடனும், புத்திசாலித்தனமான ஞானத்துடனும் நடந்து கொள்வோம்,. நம்மிடம் இந்திய விமானிகள் உள்ளார்கள். ஆனால், இங்கிருந்து நாம் எங்கே செல்லப் போகிறோம் என்பதுதான் முக்கியமானது. புல்வாமா தாக்குதல் புலன் விசாரணையை நடத்துவதற்கு எங்களால் ஆன எல்லா ஒத்துழைப்புகளையும் அளித்தோம். ஆனால், நேற்று முதல் இந்த பிராந்தியத்தில் நடந்த நிகழ்வு தொடர்பாக என் தேசத்தின் நம்பிக்கையை நான் பெற விரும்பினேன். தங்களாலும் தக்க பதிலடி தர முடியும் என்பதைக் காட்டவே இராணுவ நடவடிக்கை எடுத்தோம். நாங்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், உயிரிழப்போ பாதிப்புகளோ ஏற்படாமல் பார்த்துக்கொண்டோம். இறையாண்மையுள்ள எந்த நாடும் மற்றொரு நாடு நீதிபதியாகவும், தண்டனை அளிப்போராகவும் மாறுவதை அனுமதிக்க முடியாது. அதனால்தான், அத்துமீறல் நடந்தால் பதிலடி தருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று இந்தியாவிடம் வலியுறுத்தினோம்.” என்றும் இம்ரான் கான் தெரிவித்தார்.

#imrankahan #இம்ரான்கான் #pakistan_pm

பிடிபட்ட இந்திய இராணுவ பைலட்டின் விடியோவை வெளியிட்டது பாகிஸ்தான்!

எல்லையில் போர் பதட்டம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*