தம்பிதுரையை வைத்து நாடகமாடும் எடப்பாடி பழனிசாமி!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி விட்ட நிலையில் இக்கூட்டணி தொடர்பாக பொதுமக்களிடமும், குறிப்பாக அதிமுக கட்சிக்குள்ளும் அதிருப்தி நிலவும் நிலையில் தம்பிதுரை பாஜக அரசின் கொள்கைகளை விமர்சிப்பது போன்று பாவனைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் மூலம் அதிமுக- பாஜக கூட்டணி மீதான அவப்பெயரை அரசியல் களத்தில் துடைக்கும் முயற்சியாக தம்பிதுரையின் விமர்சனங்கள் பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அதிமுகவை முழுமையாக பாஜக கட்டுப்படுத்தி வருகிறது. குறிப்பாக அதிமுக அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன்,. அமைச்சர் வேலுமணி போன்றோர் பாஜகவின் கொள்கை உறுப்பினர்கள் பொலவே பேசு வருகிறார்கள். இந்நிலையில்தான் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணி பாஜக- அதிமுக இடையே உருவாகி இருக்கிறது. இக்கூட்டணி அதிமுக விருப்பப்பட்டு அமைக்கவில்லை. ஊழலில் ஊறித்திளைக்கும் அதிமுகவின் குடுமி பாஜக கையில் உள்ளதால், தமிழகத்தில் அதிமுக நிச்சயம் கூட்டணி வைத்தே ஆக வேண்டும் என நிர்பந்தித்து கூட்டணி வைத்துள்ளது.
இந்நிலையில், தம்பிதுரை அடிக்கடி பாஜக அரசு மீது விமர்சனங்கள் வைத்து வருகிறார். இது உடனே ஊடகங்களில் பெரிய விவாதங்களைக் கிளப்பும். ஆனால், பிரதமர் மோடி தமிழகம் வரும் போது முதல் ஆளாக தம்பிதுரை பிரதமருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்பார். பின்னர் மத்திய அரசை விமர்சிப்பார். இது மேலோட்டமாக ஏதோ தம்பிதுரைக்கும் அதிமுக தலைமைக்கும் இடையில் பாஜக தொடர்பாக முரண்பாடுகள் இருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை கொடுக்கிறது. உண்மையில் தம்பிதுரை மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது வைக்கும் அதே விமர்சனங்களை அதாவது மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. என்பது போன்ற விமர்சனங்களை ஓ.பன்னீர்செல்வமும் வைக்கிறார். ஆனால் அவர்தான் பாஜக அதிமுக பேச்சுவார்த்தையை சுமூகமாக முடித்து வைத்தவர்.
மாநிலங்களுக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. ஆனால், மத்திய அரசுடன் சுமூகமான உறவையே நாங்கள் பேணுகிறோம் என்பதுதான் மாநிலத்தை ஆளும் அதிமுகவின் நிலைப்பாடு. இதே நிலைப்பாட்டில் இருந்துதான் தம்பிதுரையும் விமர்சிக்கிறார். இதில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் ஒரு முரண்பாடுகளும் இல்லை. ஆனால், பொது மக்களிடமும் கட்சியினரிடமும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஒரு நற்பெயரையும், சம்மதத்தையும் பெற வேண்டிய நெருக்கடி எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. அதனால் இந்த விமர்சனங்களை அனுமதிப்பது. அல்லது ஊக்குவிப்பதன் மூலம், நாங்கள் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆனாலும் பாஜகவின் எல்லா நடவடிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கவே தம்பிதுரை போன்றவர்கள் பயன்படுகிறார்கள்.
உண்மையில் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து இவர்கள் சாதித்ததுதான் என்ன? ஏன் இந்த அனுசரணை என்ற கேள்வியைக் கேட்டால் இவர்களின் மொத்த மேக்கப்பும் கலைந்து உதிர்ந்து விடும்.
#2019_பட்ஜெட் #2019_Budget #Modi_Budget,

#Cellphone_Sivakumar மீண்டும் செல்போனை தாக்கிய நடிகர் சிவக்குமார்- VIDEO!

ஸ்டாலின் மருமகனைக் குறிவைக்கும் மோடி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*