தலித் துப்புரவு தொழிலாளர்களின் கால்களைக் கழுவினார் மோடி! video

துப்புரவு தொழிலாளர்களின் பாதம் கழுவிய மோடி!

துப்புரவு தொழிலாளர்களின் பாதம் கழுவிய மோடி!

Posted by Tamilarasial on Sunday, February 24, 2019

காஷ்மீரில் கடும் பதட்டம் இராணுவம் குவிப்பு!

அதிருப்தி அதிக தொகுதிகளைக் கேட்கும் பாஜக!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களைக் கழுவி மரியாதை செய்தார் பிரதமர் மோடி.உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் 2 ஹெக்டேருக்கும் குறைவாக வைத்துள்ள சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்த பின்னர் பிரயாக்ராஜ் சென்று அங்கு நடந்த கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடினார். பின்னர் துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களைக் கழுவினார். இந்த துப்புரவு தொழிலாளர்கள் கும்பமேளா நடக்கும் இடத்தை சுத்தம் செய்த தொழிலாளர்கள். 14 மாநிலங்களைச் சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு முதல் தவணையாக இரண்டாயிரம் கோடி வழங்கப்படும் என தெரிவித்தார்.

2015 செப்டம்பர் மாதம் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மொஹம்மத் அக்லாக் என்பவரை இந்துத்துவ கும்பல் ஒன்று அடித்தே கொலை செய்தது. அதை அரசியல் அரங்கில் இந்துத்துவ வலதுசாரிகள் ஆதரித்து பேசினார்கள். நாடு முழுக்க இதையொட்டி தாக்குதல்களும் வன்முறைகளும் நடந்தது. டஜன் கணக்கில் மாட்டுக்கறியின் பெயரால் தலித் மக்களும் முஸ்லீம்களும் கொலை செய்யப்பட்டார்கள். உச்சமாக மாட்டுக்கறி கொண்டு சென்றதாக ரயிலில் வைத்து ஜூனைத் என்ற சிறுவனையே கொடூரமாக குத்திக் கொன்றார்கள். 16 வயதே நிரம்பிய ஜூனைத் உள்ளிட்டோரின் கொலை நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து உனா எழுச்சி போராட்டமாக மாறியது. குஜராத்தில் ஜிக்னேஷ் மேவானி தலித் மக்களை ஒருங்கிணைத்து போராடி தேர்தலிலும் வென்றார். நாடு முழுக்க தலித் மக்கள் இந்த கொலைகளால் அதிருப்தி அடைந்த நிலையில் , நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தலித் மக்களை சமாதானப்படுத்தும் நோக்கில் துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை மோடி கழுவியிருப்பதாக இணைய தளங்களில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

#modi #bjp #2019_parliment_elaction

முகிலனுக்கு என்ன நடந்திருக்கும்?

காணாமல் போன முகிலன்் மத்திய மாநில அரசுகள் மீது ஸ்டாலின் சந்தேகம்!

அதிமுக கூட்டணி -எச்சரித்த அமித்ஷா!

ராமதாஸ் விருந்து முடிந்து திரும்பிய தலித் எம்.பி மரணம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*