திமுகவுக்கு தூதுவிட்ட பாரி வேந்தர் – ஜெர்க் ஆன திமுக!

“என்னைக் கவர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்” -விஜய் சேதுபதி பெருமிதம்

பாட்டாளி மக்கள் கட்சி- பாஜக கூட்டணி- பேச்சுவார்த்தை அதிமுகவுடன்?

இந்திய ஜனநாயகக் கட்சியை நடத்தி வரும் பாரிவேந்தர் மரியாதையான தொகுதிகள் கொடுத்தால் பாஜக கூட்டணியில் இருப்போம் என தெரிவித்துள்ளார்.பாஜகவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இருந்து வரும் பாரிவேந்தரை கடந்த அதிமுக ஆட்சியில் அவர் சிறையில் தள்ளப்பட்டார் வெளியில் வந்த பிறகு அதிமுகவையும் ஆதரித்தார்.
மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் அவரது புதிய தலைமுறை தொலைக்காட்சி திமுக எதிர்ப்பு செய்தி நிறுவனமாகவே மாறிப் போனது. பாஜகவின் ஊதுகுழல்களில் முதலிடத்தை பெறுவது யார் என்று தமிழக தொலைக்காட்சிகளுக்கு போட்டி வைத்தால் முதலிடத்தை புதிய தலைமுறை பெறும் அளவுக்கு பாஜகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாகவே மாறிப் போனது. மாநிலத்தை ஆளும் அதிமுகவையோ, மத்தியில் ஆளும் பாஜகவையோ பகைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு பாரிவேந்தர் மீதான வழக்குகள் அச்சுறுத்திக் கொண்டிருக்க தேர்தல் வருவதால் கட்சியினரை அழைத்து செயற்குழு கூட்டத்தை திருச்சியில் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர் பச்சை முத்து:-
“நாங்கள் எதிர்பார்கும் எண்ணிக்கையில் எதிர்பார்க்கும் தொகுதியை கொடுப்பதோடு மரியாதையோடு நடத்தினால் பாஜகவோடு கூட்டணி பற்றி யோசிப்போம்” என்றார். இம்முறை தான் போட்டியிடுவதோடு தன் மகனையும் கள்ளக்குறிச்சி தொகுதியில் களமிரக்க நினைக்கும் பாரி வேந்தர் பாஜக, பாமக, அதிமுக கூட்டணி அமைந்து கள்ளக்குறிச்சி தொகுதியும் கிடைத்தால் தன் மகன் எம்.பி ஆகிவிடுவார் என கணக்குப் போடுகிறார். ஆனால், கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிகவுக்கு தேவையான தொகுதி என்பதால் ஒரு குழப்பமும் அவருக்குள் இருக்கும் நிலையில், தனக்கு வேண்டிய மீடியேட்டர்கள் மூலம் திமுகவுக்கும் தூது விட்டார் பாரிவேந்தர். கள்ளக்குறிச்சி தொகுதியை பாரிவேந்தர் குறிவைக்கிறார் என்கிற அளவில் புரிந்து கொண்ட திமுகவினர் மேலிடத்தில் பேசுகிறோம் என்று மட்டும் சொல்லி அனுப்பி விட்டார்கள்.

#parivendar #puthiyathalaimurai #parivendar_pachamuthu #பச்சமுத்து #பாரிவேந்தர்_பச்சைமுத்து

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*