நாடாளுமன்ற தேர்தல் – “போட்டியுமில்லை யாருக்கும் ஆதரவுமில்லை” -ரஜினி

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடவும் செய்யாது. யாரையும் ஆதரிக்கவும் செய்யாது என ரஜினி இன்று அறிவித்துள்ளார்.

நீண்ட காலமாக அரசியலுக்கு வருவேன், வருகிறேன் என்று பாவலா காட்டிக் கொண்டிருந்த ரஜினி இன்னும் அரசியலுக்கு வந்த பாடில்லை. இந்த நாடாளுமன்ற தேர்தலிலாவது வருவார் என்ற எதிர்பார்ப்பை அவர் உருவாக்கிய நிலையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மக்கள்வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு.நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரசாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வர இருக்கும் தேர்தலில், மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

#Rajinikanth #RajiniMakkalMandram #LSPolls மனம்

கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.

வாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*