நிர்மலாதேவி என்ன சூப்பர் குற்றவாளியா? – கொதித்த மதுரை உயர்நீதிமன்றம்!

#Nirmaladevi_news

“ஞானத்துடன் நடந்து கொள்வோம்” -பாக் பிரதமர் இம்ரான்கான் உரை!

கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழி நடத்தும் தொலைபேசி உரையாடலில் கைதாகி பேராசிரியர் நிர்மலா தேவி சிறை சென்று ஒருவருடம் ஆகப்போகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பிரமுகர்கள், பல்கலைக்கழக உயரதிகாரிகள், கவர்னர் மாளிகை உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்ட நிலையில், நிர்மலாதேவியின் உயிருக்கு ஆபத்து என்றும், அவரது வாக்குமூலங்களாக வருகிறவை அனைத்தும் திரிக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் பகிரப்பட்ட நிலையில், அவருக்கு ஏன் ஜாமீன் இன்னும் வழங்கவில்லை. கொடூரமான குற்றவாளிகளே ஜாமீனில் வெளிவரும் போது நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைப்பதை தடுக்கும் சக்திகள் எது என்ற கேள்விகள் உருவாகி வந்த நிலையில்,பேராசிரியை நிர்மலாதேவி மீதான விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுகந்தி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள்,
“நிர்மலா தேவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை திருப்திகரமாக இல்லை. வழக்கை முறையாக விசாரிக்காமல் மூவரை மட்டுமே விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள். மேலும் ஒரு ஆண்டாக நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்காதது ஏன்? கொடிய கொலைக்குற்றவாளிகளுக்குக் கூட ஜாமீன் கிடைக்கும் போது நிர்மலா தேவிக்கு ஒரு வருடமாக ஜாமீன் தர மறுப்பது ஏன்? அவர் என்ன சூப்பர் குற்றவாளியா? அவருக்கு ஜாமீன் வழங்குவதில் உள்ள எதிர்ப்பை பார்க்கும் போது பெரிய இடத்து தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுவது இயற்கையான ஒன்றுதான். இந்த வழக்கை நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகிய மூவரை மட்டுமே வைத்து முடிக்க திட்டமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் நிர்மலா தேவி வழக்கை விசாரிக்க தடை விதித்தார். மேலும் இது தொடர்பாக தமிழக அரசு , சிபிசிஐடி, நிர்மலாதேவி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 18-ஆம் தேதி ஒத்தி வைத்தார்.
#நிர்மலாதேவி #Nirmaladevi #madurai_Kamaraj_univercity #Panwarilal_purohith

”கும்பலிடமிருந்து பாகிஸ்தான் ராணுவமே என்னைக் காப்பாற்றியது”-அபி நந்தன் VIDEO

பிடிபட்ட இந்திய இராணுவ பைலட்டின் விடியோவை வெளியிட்டது பாகிஸ்தான்!

எல்லையில் போர் பதட்டம்!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*