பழங்குடிகளுக்கு ஆதரவாக ராகுல்காந்தி!

பட்டா இல்லாத 11,27,446 பழங்குடிகளை காட்டை விட்டு வெளியேற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு மத்திய அரசு மறுப்பேதும் சொல்லவில்லை. ஜுலை 27-ஆம் தேதிக்குள் பழங்குடிகளை வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ள நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்களை தாக்கல் செய்யுமாறு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் ராகுல்காந்தி.
நாட்டிலுள்ள 17 மாநிலங்களில் உள்ள காடுகளில் பட்டா இல்லாமல் வசிக்கும் 11,27, 446 ஆதிவாசி பழங்குடிகளை வெளியேற்ற வேண்டும். என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி லட்சக்கணக்கான பழங்குடிகளின் வாழ்வாதாரம் குறித்து அரசியல் அமைப்பு அளிக்கும் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி உள்ளது. எல்லோருக்கும் இந்தியா வழங்கிய உரிமையை காக்கும் வகையில் நாம் இன்னும் ஆழமாக பணியாற்ற வேண்டிய நேரம் இதுவாகும். காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் இதுகுறித்தான சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், பஞ்சாப், புதுச்சேரி மாநில முதல்வர்களுக்கும், கர்நாடக மாநில துணை முதல்வருக்கும் சீராய்வு மனுவை தாக்கல் செய்வது தொடர்பாகவும், பிற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

துப்புரவு தொழிலாளர்களின் கால்களைக் கழுவினார் மோடி!

காஷ்மீரில் கடும் பதட்டம் இராணுவம் குவிப்பு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*