பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய பைலட் VIDEO!

https://www.facebook.com/tamilarasial/videos/2797493700475293/
இந்திய கட்டுப்பாட்டு எல்லையைக் கடந்து வந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் விமானப்படை விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக  இந்தியா தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளதோடு இந்திய பைலட் ஒருவரின் விடியோவையும் வெளியிட்டுள்ளது.

எல்லையில் ஏற்பட்டுள்ள இந்த போர்ச்சூழலால் இந்திய தலைநகர் டெல்லிக்கு வடக்கே உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன. ஜம்மு, காஷ்மீர், அமிர்தசரஸ், சண்டிகர், டேராடூன் உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அது போல பாகிஸ்தானிலும் பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு இந்திய விமானிகள் பாகிஸ்தான் படைகளிடம் சிக்கியுள்ளதாகவும் ஒரு விமானி சிகிச்சையில் உள்ளதாகவும், இன்னொரு விமானி தங்கள் பாதுகாப்பில் உள்ளதாகவும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விடியோவில் பேசும் விமானியின் பெயர் அபிநந்தன் என்றும் தனது சர்வீஸ் எண்ணையும் அவர் விடியோவில் கூறியுள்ளார்.

போர் தாக்குதல்கள் தொடர்பாக இரு பக்கமும் வெளியிடப்படும் தகவல்களை உறுதி செய்ய முடியவில்லை என்ற போதிலும், பதான்கோட் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் நடத்தி வரும் தாக்குதல்கள் தொடர்பாக தகவல்களை உறுதி செய்ய முடியவில்லை .

#பாகிஸ்தான் #saynowar #nomorewar #pulwama_attack

துப்புரவு தொழிலாளர்களின் கால்களைக் கழுவினார் மோடி!

காஷ்மீரில் கடும் பதட்டம் இராணுவம் குவிப்பு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*