பாஜக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக அறிவிப்பு!

அதிமுக – பாஜக கூட்டணி இன்னும் உருவானதாக அதிமுக தரப்பில் இன்னும் யாரும் கூறவில்லை. தேசியக் கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தெரிவித்தார். எந்த இடத்திலும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லவில்லை. அது போல தம்பிதுரையும் கடுமையாக பாஜகவை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக பொது செயலாளர் முரளிதரராவ் பேசும் போது “தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது. தமிழகத்தில் வலுவான கூட்டணிக்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. இன்னு ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவோம். தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும். திமுக காங்கிரஸ், மதிமுக , இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள் கூட்டணி உறுதியாகி விட்ட நிலையில் அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை ரகசியமாக வைத்துள்ளது. ஆனால், ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அதிமுக பாஜகவின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில் பாஜக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தயக்கம் காட்டுகிறது. காரணம் இந்த கூட்டணியை மக்கள் ஏற்பார்களா என்ற குழப்பம் நீடிக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*