பாஜக கூட்டணி – அதிமுக பிளவு படும்- உளவுத்துறை ரிப்போர்ட்!

உயிருக்கு அஞ்சி சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிட்ட அன்ன அசாரே!

திமுகவுக்கு தூதுவிட்ட பாரி வேந்தர் – ஜெர்க் ஆன திமுக!

“என்னைக் கவர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்” -விஜய் சேதுபதி பெருமிதம்

பாட்டாளி மக்கள் கட்சி- பாஜக கூட்டணி- பேச்சுவார்த்தை அதிமுகவுடன்?

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதை அதிமுகவில் உள்ள பெருன்பான்மையானவர்கள் விரும்பவில்லை. காரணம் முன்னாள் முதல்வரும்  அதிமுக தலைவருமான அம்மா பாஜகவை ஒரு பொருட்டாகவே கருதியதில்லை. “மோடியே லேடியா?’ என்று கெத்து காட்டிய நம் அம்மாவின் வழியில் ஆட்சி செய்யும் நாம் பாஜகவுக்கு பணிந்து அவர்களுடன் இணைவது நல்லதல்ல, என்று ஒரு சாராரின் எண்ணமும், இன்னொரு சாரார்   “நம் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளது. பாஜக மீது தமிழக மக்கள்  வெறுப்பின் உச்சியில் உள்ளார்கள். அதிருப்தியும், வெறுப்பின் உச்சியில் இருக்கும் கட்சியும் இணைந்து எப்படி மக்களிடம் வாக்குக் கேட்டு போக முடியும். ஏற்கனவே  மக்கள் அதிருப்தி நம் மீது உள்ள நிலையில், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களிடம் எந்த முகத்தை வைத்து வாக்குக் கேட்க முடியும்? அதனால் தனித்து போட்டியிட்டு தோற்றாலும் நமக்கு நிச்சயம் எதிர்காலம் இருக்கும். ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைத்து தோற்றால் பாதிபேர் பாஜக கட்சியில் இணைந்து விடும் ஆபத்து கூட உண்டு. இதானால் அதிமுகவுக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால், பாஜகவுக்கு வென்றாலும், தோற்றாலும் லாபம்தான். வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் அதை வைத்தே நாங்கள் பெரிய கட்சி என்று நம்மை மேலும் மேலும் மிரட்டுவார்கள் என்று அதிமுகவினரே அச்சப்படுகிறார்கள். புலம்புகிறார்கள்.

பாஜக கூட்டணி விஷயத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருமே நெருக்கடியால் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். பால்லாயிரம் கோடி அளவுக்கு தொழில் செய்யும் இபிஎஸ் குடும்பமும் பாஜகவுடன் அதிமுக இருப்பதையே இப்போதைக்கு விரும்புகிறது. இந்நிலையில், தனக்கு வேண்டிய உளவுத்துறை அதிகாரிகள் மூலம் மக்களின் தேர்தல் மன நிலை, அதிமுகவுக்கு மக்கள் வாக்களிப்பார்களா? என்றும் அதிமுகவினர் அதாவது அதிமுக பிரமுகர்கள் தொண்டர்கள் பாஜக- அதிமுக கூட்டணியை ஏற்பார்களா என்று உளவுத்துறை மூலம் மக்கள் மனம் அறிந்துசொல்ல கேட்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அந்த ரிப்போர்ட்டுகளை உளவுத்துறை முதல்வரிடம் காட்டிய போது முகத்தில் ஈ ஆடவில்லையாம். எடப்பாடி பழனிசாமிக்கு காரணம் பாஜக- அதிமுக கூட்டணியை மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, அதிமுக தொண்டர்களோ பிரமுகர்களோ அந்தக் கூட்டணியை விரும்பவில்லை என்று முதல் கட்ட தகவலால் அதிர்ந்திருக்கிறார்.  ஆளும் கட்சி சார்ந்த எந்த லாபங்களையும் அடையாத கீழ் மட்ட தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக.  ஜெயலலிதா இருந்த வரை யார் வேண்டுமென்றாலும் அதிமுகவில் எம்.எல்.ஏ வாகவோ, எம்.பியாகவோ ஆக முடியும். ஆனால், இப்போது அனைத்து அமைச்சர்களுமே தங்கள் வாரிசுகளையோ, உறவுகளையோ தேர்தல் களத்தில் நிறுத்த விரும்புகிறார்கள். இனி இப்படி ஒரு வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காது என அதிமுக பிரமுகர்கள் நம்புகிறார்கள்.ஆனால், இந்த ஆட்சியால் எந்த லாபமும் அடையாத அதிமுக பிரமுகர்களோ இவர்கள் தங்கள் தொழிலையும் ஊழல் செய்து சம்பாதித்த தங்கள் சொத்துக்களையும் காப்பாற்றிக் கொள்ள பாஜகவுக்கு பயந்து கூட்டணி வைக்கிறார்கள் என்ற எண்ணத்திலேயே உள்ளார்கள்.

இந்த மன நிலையை சுட்டிக்காட்டியுள்ள உளவுத்துறை ரிப்போர்ட் இன்னொன்றையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி வட மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குள்ள கட்சி, மேலும் காடு வெட்டி குரு மறைவுக்குப் பின்னர் கணிசமான வாக்கு வங்கியை  அதிருப்தி காரணமாக பாமக இழந்திருக்கிறது. காடு வெட்டி குருவின் திவீர விசுவாசிகளோ, அவரை ஹிரோவாகப் பார்த்த மக்களோ இனி பாமகவுக்கு வாக்களிப்பதில் சிக்கல் உள்ளது. மேலும், தேமுதிக தேய்ந்து கட்டெறுப்பு போலாகி விட்டது. பாஜக மீது அதிருப்தி அதிக அளவில் உள்ளது மக்கள் வாக்களிப்பது சந்தேகம்தான். அதிமுக பாஜக கூட்டணி உறுதி ஆனால், அதிமுகவுக்குள் பிளவு ஏற்படும் என எச்சரிக்கிறது அந்த ரிப்போர்ட்!

#ops_eps #AIADMK_Dilemma #AIADMK #அதிமுக_பாஜக_கூட்டணி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*