பாமகவிலிருந்து விலகினார் துணை தலைவர் நடிகர் ரஞ்சித்!

பாஜக- அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தது. பாமகவுக்கு அதிமுக-பாஜக கூட்டணியில் 7 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பாமக துணை தலைவர் ரஞ்சித் தனது துணை தலைவர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு பாமகவை விட்டும் விலகினார்.
டாக்டர் ராமதாஸ் அவர்களால் துவங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி வட மாவட்டங்களில் வாழும் வன்னிய மக்களின் சமூக உரிமைகளுக்கான மக்கள் இயக்கமாக அரசியல் களத்தில் உருவாகி வளர்ந்தது. பல ஆண்டுகளாக திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டு வந்த பாமக அதிமுக ஆட்சியில் கடும் ஒடுக்குமுறைகளைச் சந்தித்தது. அதிமுகவுக்கு எதிராக பாமக தலைவர் ராமதாஸ் நூலை வெளியிட்டார். அத்தோடு “திமுக அதிமுகவோடும் திராவிடக் கட்சிகளோடும் இனிமேல் கூட்டணி இல்லை. இல்லவே இல்லை” என்று சத்தியம் செய்தார். ஆனால், தேசியக் கட்சியான பாஜக- திராவிடக் கட்சியான அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் உடன்பாடு கண்டிருக்கிறார். இது அக்கட்சியினருடையே கடும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பாமகவின் நிலைப்பாடுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தமிழ் சினிமா நடிகர் ரஞ்சித் பாட்டாளி மக்கள் கட்சியில் துணை தலைவர் பதவியில் இருந்து வந்தார். அதிமுகவுடனான கூட்டணியை கண்டித்து அவர் பதவி விலகியிருக்கிறார்.
கோவையில் நடிகர் ரஞ்சித் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“கடந்த வாரம் வரை அதிமுகவுக்கு எதிராகவும் முதல்வருக்கு எதிராகவும் பேசிவிட்டு தற்போது அவர்களுடன் கூட்டணி வைப்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி விட்டு அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறது என்றால் பாமக தொண்டர்களிடம் இது பற்றி கருத்துக் கேட்டிருக்க வேண்டும். அது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் பாமக கேட்கவில்லை.ஆனால், கருத்துக் கேட்கப்படும் என பொதுக்குழுவில் அறிவித்தார்கள். மதுவுக்கு எதிராக போராடி விட்டு குட்கா ஊழலில் ஈடுபட்டவர்களுடனும், மதுக்கடை நடத்துகிறவர்களுடனும் கூட்டணி வைத்துள்ளது.மக்களை நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றி விட்டது.நான்கு பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. நம்பிக்கையுடன் கட்சியில் இணைந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.அனைத்து அமைச்சர்களுடனும் ஊழல் புகார்களை கவர்னரிடம் கூறி விட்டு எப்படி அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம்? எதை வைத்து எப்படி மக்களிடன் அன்புமணி வாக்குக் கேட்பார்?” என்று கேள்வி எழுப்பினார் ரஞ்சித்.
அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமகமீது உட்கட்சியிலேயே அதிருப்தி உருவாகி வருகிறது.
#PMK #ActorRanjith #2019_நாடாளுமன்றதேர்தல் #பார்லிமெண்ட் #Parliment_elaction #2019_elaction

ஐந்து விமான நிலையங்களை அதானியிடம் வழங்கியது மத்திய அரசு?

கூட்டணி விளக்கம் அன்புமணி டென்ஷன்!

துப்புரவு தொழிலாளர்களின் கால்களைக் கழுவினார் மோடி!

காஷ்மீரில் கடும் பதட்டம் இராணுவம் குவிப்பு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*