புதியதமிழகம் கிருஷ்ணசாமியை கைவிட்டது பாஜக?

பழங்குடிகளுக்கு ஆதரவாக ராகுல்காந்தி!

ஐந்து விமான நிலையங்களை அதானியிடம் வழங்கியது மத்திய அரசு?

கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு அரசியல் சேவகம் செய்து வந்த புதிய தமிழகம் கட்சிக்கு பாஜக- அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இப்போது புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு தொகுதிகள் எதையும் பாஜக-அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்படவில்லை என்ற தகவலால் கிருஷ்ணசாமி அப்செட் ஆகி உள்ளார். புதிய தமிழகம் தலைமையில் தனிஅணி  அமைப்பது பற்றி அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தென் தமிழகத்தில் விவசாய சமுகமான தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் பள்ளர் சாதி மக்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்ற பெயரில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மட்டுமல்லாமல் பலரும் அழைத்து வருகிறார்கல். சாதிகள் மேல்நிலையாக்கம் பெறுவதும், தங்களை மேன்மையாக்கிக் கொள்வதும் இயல்புதான். பல சாதிகள் காலப்போக்கில் தங்களை மேல்நிலையாக்கம் செய்து கொண்டிருக்கிறது என்றாலும், இந்த மேல் நிலையாக்கத்தால் வருண பேதத்தில் சடங்குகளை ஓதுவதில் முன்னுரிமை கிடைக்குமா என்ற கேள்விக்குறி இயல்பாகவே உள்ளது. என்றாலும் , பள்ளர் இன  மக்கள் பட்டியலில் இருந்து வெளியேறி தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயருடன்  இருக்க வேண்டும் என்ற கோஷத்துடன் பாஜகவோடு இணைந்தார் கிருஷ்ணசாமி.

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்திற்கும்  ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், பாமக, பாஜகவுக்கு தொகுதிகள் ஒதுக்கி விட்டது அதிமுக. இந்நிலையில் தங்களுக்கு தொகுதி கிடைக்குமா என்ற சந்தேக ம் கிருஷ்ணசாமிக்கு உருவான நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி:-

“பட்டியல் வெளியேற்றம் தொடர்பாக பாஜக- அதிமுக கட்சிகள் மவுனமாக இருக்கிறது. அதை அமலாக்கும் தகுதி படைத்த அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பற்றி பரிசீலனை செய்வோம். மேலும், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் புதிய தமிழகம் தலைமையில் அரசியல் இயக்கங்களை இணைத்து தேர்தல் களமாட உரிய வியூகம் வகுக்கப்படும்” என்றார்.

பாஜக-அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதி ஒதுக்கப்படா விட்டால் அவர் தனித்து களம் காணும் எண்ணத்தில் இருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது.ஆனால் தேமுதிக அதிமுக கூட்டணிக்குள் வராத பட்சத்தில் பாஜகவுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கப்பட்டு அதில்  ஒரு தொகுதி கிருஷ்ணசாமிக்கு வழங்கப்படலாம் என்ற தகவலும் சுற்றிக் கொண்டிருக்கிறது.

 

#கிருஷ்ணசாமி #புதியதமிழகம்_பாஜக #பட்டியல்வெளியேற்றம் #Puthiyatamizaham #kirishnaswamy

துப்புரவு தொழிலாளர்களின் கால்களைக் கழுவினார் மோடி!

காஷ்மீரில் கடும் பதட்டம் இராணுவம் குவிப்பு!	

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*