”போரிலும் சண்டையிலும் செலவு செய்ய நான் விரும்பவில்லை” -இம்ரான்கான் உரை!

எப்படி பாகிஸ்தானிடம் பிடிபட்டார் அபிநந்தன்?

எது பெஸ்ட் குக்கரா இரட்டை இலையா?

பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய வீரரை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. அவர் தன் உரையில்,

“ என் அழைப்பை ஏற்று அவைக்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி. இந்தியாவின் கோபத்திலும் தாக்குதலிலும் கூட பாகிஸ்தான் ஒற்றுமையாக இருந்தது. யுத்தத்திலும் சண்டையிலும் செலவு செய்ய எனக்கு விருப்பமில்லை. நாட்டின் முன்னேற்றத்திற்காக செலவு செய்யவே விரும்புகிறேன். பாகிஸ்தான் ஊடகங்கள் மிகவும் கட்டுக்கோப்புடனும் ஒழுங்குடனும் செயல்பட்டது அவர்களுக்கு என் நன்றிகள். புல்வாமா தாக்குதல் போன்ற மிக மோசமான ஒரு தாக்குதலை எந்த நாடவாது நடத்துமா? அப்படி ஒரு முட்டாள் தனத்தை பாகிஸ்தான் செய்தது என்று இந்தியா எப்படி கூறுகிறது. எப்படி பாகிஸ்தான் மக்கள் மீது பழி போடுகிறார்கள். புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தொடர்புடைய ஆதாரங்களை எங்களிடம் கொடுத்திருக்கலாம்.

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பே கொடுத்திருந்தால் விசாரித்து இருப்போம். இரு நாட்டு எல்லையிலும் பதட்டம் ஏற்பட்ட உடன் நான் இந்திய பிரதமர் மோடியுடன் பேச முயன்றேன். அவருக்கு தகவல் அனுப்பினேன். இந்தியா – பாகிஸ்தான் இடையே இருக்கும் பிரச்சனையை பேசித்தீர்க்க வேண்டும் என்று அவரை தொடர்பு கொள்ள முயன்றேன். துருக்கி தலைவர்களுடன் இது தொடர்பாக பேசுவேன். பாகிஸ்தான் எப்போதும் அமைதியை விரும்புகிறது. அமைதிதான் முக்கியம். பாகிஸ்தானின் அமைதியை மற்ற நாடுகள் கோழைத்தனமாக நினைத்து விடக்கூடாது. நாங்கள் அமைதியான நடாகவே இருக்க விரும்புகிறோம். அதுதான் எங்கள் நாட்டிற்கு நல்லது.”

“எனக்கு இந்தியாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் பலமுறை இந்தியாவுக்கு விளையாடச் சென்றிருக்கிறேன். இந்திய அரசின் செயல்பாடுகள் அங்கு பலருக்கு பிடிக்கவில்லை என்பது எனக்கு தெரியும். இந்திய அரசின் நடவடிக்கைகளில் பிழையிருப்பதை அங்குள்ள இந்தியர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிகளின் தற்கொலை படைத்தாக்குதல்கள் மதம் காரணமாக நடப்பது இல்லை. அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்புக்கு முன்னர் அவரை அதிக அளவு தற்கொலை படை தாக்குதலை நடத்தியது விடுதலைப்புலிகள் இயக்கம். அவர்கள் இந்துக்கள்தான் ஆனால் மதத்தால் இந்த தாக்குதலை அவர்கள் நடத்தவில்லை. அவர்களுக்கு வேறு பிரச்சனைகள் இருந்தது. வேறு விதமான கோபம் அவர்களுக்குள் இருந்தது. ஆனால், தற்கொலை படை தாக்குதல் பலவீனமானவர்களின் வடிவம் .ஆனால் அது ஏன் நடந்தது என்று சிந்திக்க வேண்டும். நாங்கள் அபிநந்தனை விடுதலை செய்கிறோம். மக்களின் நன்மை கருதியும், அமைதி கருதியும் அந்த இராணுவ வீரரை விடுதலை செய்கிறோம். நாளை அவர் விடுதலை செய்யப்படுவார். ”என்று பேசினார்.
இம்ரான்கானின் இந்த உரை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

#அபிநந்தன் #IAF_Wing_Commander_Abhinandan_Varthaman #Abhinandan_Varthaman #இம்ரான்கான் #IMRANKHAN #PAKISTAN_PM

நாளை விடுவிக்கப்படுகிறார் அபிநந்தன்!

“ஞானத்துடன் நடந்து கொள்வோம்” -பாக் பிரதமர் இம்ரான்கான் உரை!

நிர்மலாதேவி என்ன சூப்பர் குற்றவாளியா? – கொதித்த மதுரை உயர்நீதிமன்றம்!

”கும்பலிடமிருந்து பாகிஸ்தான் ராணுவமே என்னைக் காப்பாற்றியது”-அபி நந்தன் VIDEO

பிடிபட்ட இந்திய இராணுவ பைலட்டின் விடியோவை வெளியிட்டது பாகிஸ்தான்!

எல்லையில் போர் பதட்டம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*