மக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.

வாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்?

சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் அமைந்த அரசுகளிலேயே மிக மோசமான அரசு என்று பெயர் எடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி அரசை வானாளவ புகழ்ந்துள்ளார் பாஜக தலைவர் தமிழிசை.
கூவத்தூரில் சசிகலா தயவில் முதல்வராகி பின்னர் அவரை கவிழ்த்து விட்டு மோடியின் பக்கம் செட்டிலாகி தன் ஆட்சியை காப்பாற்றிக் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி.வருமானவரித்துறை ரெய்டுக்கு பெயர் போன அரசாகவும் இந்த அரசு இருந்த நிலையில். தனது தலைவர் ஜெயலலிதாவின் கொட்நாடு எஸ்டேட்டில் நடந்த ஐந்து மர்ம மரணங்கள் தொடர்பான சந்தேக நிழலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது விழுந்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் 13 பேரை சுட்டுக்கொலை செய்து தனது முதல்வர் பதவிக்கு மகுடம் சூட்டிக் கொண்டார். ஓக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்காமல் 250 பேர் வரை மரணமடைந்தமை, கஜா புயலில் காவிரி டெல்டா ஒட்டு மொத்தமாக காலியானது. நீட் தேர்வில் அநீதி என எடப்பாடி பழனிசாமியின் மகுடங்களுக்கு பஞ்சமே இல்லை.
இந்த நிலையில் பாஜக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை சென்னையில் நடந்து வருகிறது. இது ரகசிய பேச்சுவார்த்தையாக நடந்து வருகிறது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இதற்காக சென்னை வந்துள்ளார். ஒட்டு மொத்தமாக 40 தொகுதிகளில் 20 தொகுதிகள் எங்களுக்கு வேண்டும் என்று அதிமுகவை மிரட்டியே அந்த தொகுதிகளை பாஜாக வாங்கி விட்டதாக கூறப்படும் நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை:-
“சவால்களையும், சதிகளையும் கடந்து பல நல்ல திட்டங்களை முதல் அமைச்சர் பழனிசாமி கொண்டு வந்துள்ளார் என புகழாரம் சூட்டியுள்ளார். மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தந்து மக்களின் மனம் கவர்ந்தராக உள்ளார். பல சோதனைகளை சாதனையாக்கி 3 ஆவது ஆண்டில் தொடரும் முதல் அமைச்சருக்கு எனது வாழ்த்துக்கள் என அவர் வாழ்த்தியுள்ளார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*