முகிலனுக்கு என்ன நடந்திருக்கும்?

காணாமல் போன முகிலன்் மத்திய மாநில அரசுகள் மீது ஸ்டாலின் சந்தேகம்!

அதிமுக கூட்டணி -எச்சரித்த அமித்ஷா!

அணு உலை எதிர்ப்பு, ஸ்டெர்லைட், மணல் கொள்ளை, நீட் உள்ளிட்ட தமிழகம் சந்திக்கும் பிரதான பிரச்சனைகளில் இடைவிடாத போராட்டங்களை நடத்திய முகிலனை கடந்த பல நாட்களாக காணவில்லை. அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி பொதுவெளியில் அச்சமும் கேள்விகளும் உருவாகியிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் ஸ்டெர்லைட் தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்ட முகிலன் சென்னையில் வைத்து காணாமல் போயுள்ளார். அவருக்கு என்ன நடந்து என்பது பற்றிக்கு எந்த ஒரு தகவலும் இல்லை. அவர் தொடர்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசாருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசுக்கு போலீஸ் இன்னும் பதில் எதையும்  சொல்லவில்லை. ஆனால், முகிலன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தினுள் செல்லவில்லை. சென்றவர் பின்னர் வெளியேறி விடுகிறார். அவருக்கு தனிப்பட்ட பிரச்சனைகளும் இருக்கிறது என்று செய்திகள் காவல்துறையால் பரப்பப்பட்டுகிறது.

முகிலனுக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சனைகள் இருக்கும் என்றால் அதை விசாரித்து பதிலளிக்க வேண்டியது காவல்துறையின் கடமை.ஆனால், அதை விட்டு விட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஒருவர் மீதே சந்தேகம் வரும் வகையில் செய்திகளை பரப்பு நியாயமானதா?

முகிலன் அணு உலை எதிர்ப்புப் போராட்டம்,  மணல் கொள்ளைக்கு எதிராக தீவிரமாக போராடியவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மிகத் திவீரமாக போராடிய அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. மணல் கொள்ளையர்களோ, ஸ்டெர்லைட் நிர்வாகமோ அவரை தனியார் மூலம் கடத்தியிருக்கலாம். அல்லது ஸ்டெர்லைட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்காக தமிழக காவல்துறையே முகிலனைக் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் பொதுவெளியில் உள்ளது.

முகிலனுக்கு என்ன ஆனது அவர் உயிரோடு இருக்கிறாரா? அல்லது கொல்லப்பட்டு விட்டாரா என்ற கேள்விக்கு பதில் இல்லை.   யுத்த காலத்தில் இலங்கையிலும், பாலஸ்தீனத்திலும்தான் இளைஞர்கள் காணாமல் போவார்கள். வெள்ளைவேன்களில் வந்து கடத்திச் சென்று பலரும் காணாமல் ஆக்கப்படுவார்கள் . இந்தியாவில் காஷ்மீரில் பல இளைஞர்கள் காணாமல் போவார்கள். இந்நிலையில்தான் தமிழகத்தில் சமூகப் போராளி ஒருவர் காணாமல் போயுள்ளது அச்சத்தையும் பெரும் பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது.

#முகிலன்_எங்கே #முருகன் #Murugan #Where_is_mugilan

ராமதாஸ் விருந்து முடிந்து திரும்பிய தலித் எம்.பி மரணம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*