மோடியின் கோட்டையில் இருந்து நாளை பிரச்சாரத்தை துவங்கும் ராகுல்காந்தி!

பிரதமர் நரேந்திரமோடி பிறந்த மாநிலமான குஜராத்தில் நாளை நாடாளுமன்ற பிரச்சாரத்தை துவங்குகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.
2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற நரேந்திரமோடியின் கடைசி பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றோடு முடிவடைந்தது. இது இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் முடிந்துள்ள 16-வது பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆகும். 17-வது மக்களவை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற இருக்கிறது.
இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றவும் முனைப்பு காட்டி வருகிறது.பாஜக – காங்கிரஸ் இல்லாத கூட்டணியை மாயாவதி, அகிலேஷ்யாதவ், மம்தா பானர்ஜி போன்றோர் உருவாக்க முயல்வதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு பரபரப்பான சூழலில் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் லால்டுங்ரி பகுதியில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் நாளை பிற்பகம் காங்கிரஸ் தலைவர் ராகுல் உரையாற்றுகிறார்.
2017 சட்டமன்ற தேர்தலின் போது குஜராத் வந்த ராகுல்காந்தி இப்போது காங்கிரஸ் தலைவரான பின்னர் முதன் முறையாக குஜராத் வருகிறார். இதனால் இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த நான்கு முறை பாஜகவிடம் இருந்து குஜராத்தை மீட்க முடியாமல் திணறும் காங்கிரஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் 17 இடங்களை கூடுதலாக பெற்றது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்றாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மேலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. எனவே குஜராத்தில் இருந்து நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் துவங்குவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
. #RahulGandhi #Rahulrally #RahulinGujarat #Gujaratrally

விடுதலையாகிறார் சசிகலா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*