ராமதாசுக்கு எதிராக காடுவெட்டி குரு!

வன்னியர் சங்கத்தின் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முதுகெலும்பாக வட மாவட்டங்களில் இருந்தவருமான காடு வெட்டி குரு மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி, மகன், தாய் ஆகியோர் டாக்டர் ராமதாசுக்கு எதிராக பேசி வரும் நிலையில், காடு வெட்டி குருவை சிறையில் அடைத்த அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் கூட்டணி வைத்திருப்பது காடு வெட்டி குரு ஆதர்வாளர்களை ஆத்திரம் கொள்ள வைத்திருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், காடு வெட்டி குருவை மரக்காணம் வன்முறை தொடர்பாக சிறையில் அடைத்த ஜெயலலிதா மீதும் அதிமுகவினர் மீதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கடும் கோபத்தில் இருந்தனர். அதையே பாட்டாளி மக்கள் கட்சி தலைமையும் விரும்பியது. காரணம் ராமதாஸ் அதிமுக ஆட்சி பற்றி நூல் எழுதினார். மீண்டும் மீண்டும் திமுக, அதிமுகவோடு கூட்டணி இல்லை என்றார். உச்சக்கட்டமாக அன்புமணி ராமதாஸ் ஓ.பி.எஸ்-இபிஎஸ் இருவரையும் டயர் நக்கிகள் என்றார். ஒபிஎஸ்-இபிஎஸ் இருவர் மீதும் எத்தனையோ அரசியல் தலைவர்கள் விமர்சனம் வைத்த போதும் அவர்கள் யாரும் இருவரையும் டயர் நக்கிகள் என்று சொன்னதில்லை. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் டயர் நக்கிகள் என்று  யாரோ எழுதும் விஷயத்தை அன்புமணி  சொன்னார். இத்தனையும் பேசி விட்டு அதிமுகவுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், அதிமுகவோடு பாமக கூட்டணி வைத்தது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

எப்படி தேர்தல் வேலை பார்க்க முடியும் என்ற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ள நிலையில். காடுவெட்டி குருவின் குடும்பம் ஏற்கனவே வருத்தத்தில் இருந்த நிலையில் இந்த கூட்டணி அவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதனால் அவர்கள் தனியாக ஆலோசித்து வருகிறார்கள். பண்ருட்டி வேல்முருகன், காடு வெட்டி குரு ஆதரவாளர்களையும் தங்கள் பக்கம் கொண்டு வர பிரதான எதிர்க்கட்சியான திமுக பணி செய்து வரும் நிலையில். திட்டக்குடி உள்ளிட்ட பல இடங்களில் காடு வெட்டி குருவின் பெயர் பொறித்த கொடிகள் ஊருக்கு ஊர் பறக்கத் துவங்கியிருக்கிறது.அன்புமணி ராமதாஸ் போட்டியிடும்  தொகுதியில் காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அவர்களை களமிரக்க முடிவெடுத்துள்ளார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு போட்டியிடும் தொகுதிகளில் பெரும் சவாலாக இருக்கப் போவது காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள்தான். என்று  பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் இருந்தே தகவல் தருகிறார்கள்.

#2019_நாடாளுமன்ற_தேர்தல் #பாமக_அதிமுக_கூட்டணி #நாடாளுமன்ற_தேர்தல் #பாஜக_பாமக

கமல் ஸ்டாலினை சீண்டுவது ஏன்?

வாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*